பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் }'r = பழமொழிகளை ஜோடி ஜோடியாக விற்க வேண்டும் என்று சொல்லுவது சரிதான். ஒற்றைப் பழமொழி பாதி உண்மையாகத் தான் இருக்கும். கி. டபுள்யூ மாத்யூஸ் வியாபார உலகில் தங்க நாணயங்கள் எப்படியோ, அப்படிச் சிந்தனை உலகில் பழமொழிகள் இரண்டும் அளவில் சிறியவை. எல்லா மக்களிடத்தும் புழக்கத்தில் உள்ளவை. * պւ եւոn* பழிக்குப் பழி

  • பழி வாங்குதலுக்கு முன்யோசனை கிடையாது. ைநெப்போலியன் * பழி வாங்குவதால் ஒரு மனிதன் தன் எதிரிக்கு நிகராகி விடுகிறான். ஆனால், செய்யப்பெற்ற தீங்கை மறந்துவிட்டால், நீ மேலானவனாவாய். ஈ பேக்கர்
  • பழி வாங்குதல் வீரமன்று. ஆனால், பொறுப்பதே வீரம்.

அ ஷேக்ஸ்பியர் பாராட்டுதல்

  • மேன்மைக்கு அடுத்தபடி அதைப் பாராட்டுதல் மேன்மையாகும். க. தாக்கரே
  • எந்த மனிதரையும் நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. தொழிலாளி தன் முன்னிலையில் தன் வேலையைக் குறைவாகப் பேசுவதை விரும்பமாட்டான். அ டி. ஸேல்ஸ்
  • மற்றவர்களுடைய நற்செயல்களைப்பற்றிச் சிந்திப்பதில் மகிழ்ச்சி யடையாதவன் எவ்வித நற்செயலையும் செய்ய முடியாது.
ைலவேட்டர் * பாராட்டு உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும்:

பலவீனமானவர்கள் பாராட்டோடு திருப்தியடைந்துவிடுவார்கள். அ கோல்டன்