பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

25


ப. ராமஸ்வாமி 25 மரணம் வாழ்வின் சிகரம் மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர். | பங் ஓ! அநித்தியமான வாழ்வு காற்றைப் போன்றது. அது ஒரு முனகுதல். ஒரு பெருமூச்சு. ஓர் அழுகை அல்லது ஒரு புயல், ஒரு போராட்டம். அ எட்வின் ஆர்னால்டு நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர்: கேர்டை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள். அ வோர்ட்ஸ்வொர்த் யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையால் ஆய பயன்கொள்க - யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். 2 நாலடியார் நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. அ. திருவள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு. A திருவள்ளுவர் அநீதி == அநீதியிழைப்பவன் அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகத் துயரடைவான். அ பிளேட்டோ அநீதியைத் தாங்குவதைவிட அநீதியிழைப்பது மேல் என்று எவரும் சொல்லத் துணியார். அ அரிஸ்டாட்டல் உனக்கு அநீதி செய்யப்பட்டால் பொறுத்துக்கொள்: நீ அதைச் செய்வதில்தான் துக்கம் ஏற்படும். * டெமாக்ரிடஸ்