பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v. ratoovovreb : 275 உயிருள்ள ஒரு மனிதனைத் தவிர, புத்தகத்தைப்போல ஆச்சரியமானது வேறு எதுவுமில்லை! அது முன்னால் இறந்து போனவர்கள் நமக்களித்துள்ள செய்தி. அந்த ஆன்மாக்களை நாம் பார்த்ததேயில்லை ஒரு வேளை, அவர்கள் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும் எனினும், அந்தச் சிறு காகிதங்கள் நம்மிடம் பேசுகின்றன. பயமுறுத்துகின்றன. நமக்குக் கற்பிக்கின்றன. ஆறுதலளிக்கின்றன. சகோதரர்களைப் போல நமக்குத் தம் இதயங்களைத் திறந்து காட்டுகின்றன. அ. சார்லஸ் கிங்ஸ்லே புத்தகங்கள் ஞானிகள் வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்கு கின்றன. | ப்ெபன் புத்தகங்களை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்; சில நூல்களே போதும். என் புத்தகங்கள் என்னை மதுக்கடைகளுக்கும். விளையாட்டிடங்களுக்கும் செல்ல விடாது தடுத்துள்ளன.போப், அடிஸ்ன் முதலியவர்களுடன் பழகியவன் லேடி ஸ்பியர், மில்டன் முதலியவர்களின் மெளனமான பேச்சுகளைக் கேட்டவன். அற்பர்களுடனும் தீயவர்களுடனும் கூடியிருக்க விரும்ப மாட்டேன். அ. தாமஸ் ஹபிட் ஐரோப்பாவிலுள்ள மணிமுடிகளையெல்லாம் என்னிடம் அளித்து என் புத்தகங்களையும் படிப்பையும் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால் நான் அந்த முடிகளை விட்டெறிந்துவிட்டு, என் புத்தகங்களையே போற்றுவேன். - ைஃபெனிலன் நாம் பெறும் கருத்துகளின் அறிவைச் செயலில் பயன்படுத்தா விட்டால், நூல்கள் வெறும் பழைய தாள்களேயாம். அ புல்வெர் ' : : : r. n எகிப்திய மன்னர் ஒருவர் தமது நூல் நிலையத்தின் வாயிலில், 'ஆன்மாவின் மருந்துகள் என்று எழுதியிருந்தார். அப்படி