உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி -: 77 உண்மையாகும். வாழ்க்கை சிறுசிறு விஷயங்களைக் கொண்டது. பெருங்காரியத்தை உடனே செய்யும்படியான சந்தர்ப்பம் ஏற்படுவதே அரிது. அற்ப விஷயங்களிலும் பெருந்தன்மையோடு விளங்குவதே உண்மையான பெருமை. உ. வி. ஸிம்மன்ஸ் நீரோ மன்னனைப் போலக் குதிரைகளுக்குத் தங்கத்தினாலான லாடங்கள் கட்டுதல் பெரிய அறிவீனமாவது போன்றது. அற்ப விஷயங்களில் நேரத்தைக் கழிப்பதும். ைஜே. மேலன் பெரும் தகுதியால் உன்னைப் பிறர் மதிப்பார்கள். பெரும் குறைபாடுகளால் உன்னை வெறுப்பார்கள். ஆனால், அற்ப விஷயங்கள். சொற்ப உபகாரங்கள். ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்களைக்கொண்டே உலக வாழ்க்கையில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். க செஸ்டர்ஃபீல்டு மனிதர்கள் அற்ப விஷயங்களாலேயே இழுத்துச் செல்லப் படுகின்றனர். உ. நெப்போலியன் ஆயிரம் காடுகளை உண்டாக்கும் ஆற்றல் ஒரு விதையில் அடங்கியிருக்கின்றது. அ எமர்பைன் அற்புதங்கள் அற்புதம் எதுவும் அதைப் பார்க்கிறவருக்குப் புரியாததாலும், இயற்கையான முறைக்கு மாறாக இருப்பதாலும். அது தெய்விகமானது என்று கருதப்பெறுகின்றது. . லாக் ஆத்திகர் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அற்புதம், உன் பெய்லி முற்கால உலகில் அறிலைப் புகட்டுவதற்கு அற்புதங்கள் பயன்பட்டு வந்தன. எனவே. அவை தெய்விகமாயிருந்தன.