பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

or

ப. ராமஸ்வாமி B1 இதயத்தில் இடமிருந்தால், வீட்டிலும் இடமிருக்கும். முர் தெய்வத்தைப்பற்றிய தியானமும், அன்பும் மனிதனுக்கு இருந்தால் போதும் - அவன் மலைகளைப் போல் நெடுங் காலம் நிலைத்திருத்தலைப் போன்றது. . வா. எl பணிவுள்ள அன்புதான் சுவர்க்க வாயிலைக் காத்து நிற்கின்றது: செருக்குள்ள விஞ்ஞான அறிவன்று. מי/ ו רי( அன்பின் வழியது உயிர்நிலை. அ திருவள்ளுவர். அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப. வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. ைதிருவள்ளுவர் அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு. க திருவள்ளுவர் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் திருவள்ளுவர் ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று. அ முதுமொழிக்காஞ்சி அன்னை உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், என் தாயை மறு தட்டிலும் வைத்து நறுததால், உலகின் தட்டுத்தான் மேலேயிருக்கும். அ லாங்டேல் பிரபு அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். பீச்சர் அன்னையின் மடியிலிருந்துகொண்டு முதல் முறையாகக் கேட்ட கதைகள் முழுதும் மறக்கப்பெறுவதில்லை. வாழ்க்கைப் பாதையில் கொடுமையான வெப்பத்தால் வெந்து தவிக்கும் நமக்கு இது ஒன்றே வற்றாத நீரூற்று. . ர.பி.சி தாயின் நற்குணங்களும். தந்தையின் பாவங்களும் குழந்தைக்கு வந்து சேரும் என்று எங்காவது எழுதி வைத்தல் நலம். சா டிக்கன்ஸ் உ. அ. - 6