பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 or × ok உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் குழந்தையின் எதிர்காலக் கதி எப்பொழுதும் தாயில் வேலையால் அமைகின்றது. அ நெப்போலியன் நான் இப்பொழுதுள்ள நிலைமைக்கும். இனி அடைய நம்பிக் கொண்டிருப்பதற்கும், நான் என் தெய்விகத் தாய்க்:ே கடமைப்பட்டிருக்கிறேன். அ லிங்கள் சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் இருக்கின்றது. * գքէ-ոGւյmiւ: "ஃபிரான்ஸ் தேசத்து இளைஞர்கள் நல்ல முறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை? என்று நெப்போலியன் ஒரு சமயம் வினவினார். "நல்ல தாய்மார்கள் என்று பதில் வந்தது. சக்கரவர்த்தி அதை ஆர்வத்துடன் மனத்தில் வாங்கிக் கொண்டு ஒரே வார்த்தையில் இதோ ஒரு கல்வித் திட்டமே அமைந்திருக்கின்றது' என்று கூறினார். அ ஆபட் தாய்மார்கள் உருவாக்கிய முறையிலேதான் மனிதர்கள் இருப்பார்கள். முரட்டுத் துணிகளை நெய்யும் தறியில் காஷ்மீரப் பட்டை எதிர்பார்ப்பதும், பொறியியல் நிபுணரிடம் கவிதையை எதிர்பார்ப்பதும், தரகுக்காரனிடம் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை எதிர்பார்ப்பதும் வீணாகும். அ எமர்ஸன் ஃபிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் அவள் நல்ல பிள்ளைாளையும் அடைவாள். அ நெப்போலியள் மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். அ உலக நீதி ஆகாயக் கோட்டைகள் or நீ ஆகாயத்தில் கோட்டைகள் கட்டியிருந்தால் உன் வேலை வீணாய்ப் போகாது. அவை இருக்க வேண்டிய இடம் அது தான். இப்பொழுது அவைகளின் அடியில் அடிப்படைகளை அமைத்துவிடு. அ தோரோ