பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இப்படிப்பட்ட உடற்கல்விப் பாட முறைகள், சூ ஆட்சி காலத்திற்குப் பிறகு வந்த அரசுகளின் ஆதரவை இழக்கத் தொடங்கின. கன். பூவழியளப் காலம் கி.மு. 85/ - 47/ சிறந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்த மேதை கன்ஃ பூவியஸ் ஆண்ட காலத்தில், ஆதரவை இழந்த உடற்கல்விக்கு உயிரூட்டும் பணி மேற் கொள்ளப்பட்டது. அவரது அறிவார்ந்த எழுத்துக்கள் மூலமாக இந்த எழுச்சி ஏற்பட்டது. சூ ஆட்சியினரின் காலத்தில், அரசுப் பொறுப்பில் இயங்கிய பள்ளி நிறுவனங்கள் யாவும் விடுபட்டுப் போயின. தனியார் வசம் இவைகள் சென்றடைந்தன. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் யாவும், அறிவு வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கின. இராணுவத்தில் உள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிப்பதற்காக, விஷேஷப் பள்ளிகள் நிறுவப்பட்டன. போர் வீரர்களுக்கு இலக்கிய அறிவு தரும் பாட முறை, சிறிதளவே இருந்தது. அவர்கள் உடல் வலிமை உள்ளவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்குவதற்கேற்றவாறு கடினமான பயிற்சி முறைகளையே பேரளவில் கற்பிக்கப்பட்டனர். a அத்தகைய பயிற்சிகளில் இடம் பெற்றவை, கனமான எடைகளைத்துக்குதல், விற்பயிற்சி, வாள்சண்டைப்பயிற்சி, குதிரையேற்றம், அத்துடன் கால் பந்தாட்டம் போன்ற ஒருவகை உதைப் பந்தாட்டம். ஆயுதமின்றித் தாக்கிப் போரிடும் ஜியூ ஜிட்சு சண்டைப் பயிற்சி, சதுரங்க ஆட்டம் போன்றவைகளும் இடம்பெற்றன. ஏனெனில், கடுமையான இராணுவ உடற்பயிற்சிகளுக்கு சற்று மாறாக, மகிழ்ச்சி தரும் விளையாட்டுக்களும் அங்கே இடம் பெற்றன.