பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தேசிய உடல்திற ஆற்றல் வளர்க்கும் திட்டம் (National Physical Efficiency Drive) நாட்டின் நல்லவளர்ச்சிக்கு நல்ல பல திட்டங்களை மத்திய அரசு வகுத்தளித்து வலிமை பெறக்கூடிய அளவில் வழிமுறைகளை வழங்கியது. அவற்றில் ஒன்று தான் தேசிய உடல்திற ஆற்றல் வளர்க்கும் திட்டமாகும். 1959-60ம் ஆண்டு காலத்தில், இந்தத் திட்டம் மத்திய அரசால் மக்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது. ! இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது, இளைஞர்களிடையேயும் மக்களிடையேயும் உடல்திற ஆற்றலைவளர்த்துதேசியபாதுகாப்புக்காக மகோன்னதமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்குவதுதான். தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் வலிமை, வேகம் நீடித்துழைக்கும்ஆற்றல்,செயற்பாட்டில்நெகிழ்ச்சித்தன்மை எல்லாம் உண்டு. அவற்றை வளர்ப்பதன் மூலமே ஆற்றலும் ஆண்மையும் பெற முடியும் என்பதற்காக, ஒரு சில தேர்வுகளை உருவாக்கினர். ஒடுதல், தாண்டுதல், எறிதல் போன்று அடிப்படை செயல்களில், அளவுநிர்ணயம்(Standard) அமைத்து, அதில் வெற்றிகரமாகக் கடந்து முடிப்பவர்களுக்கு ஒரு நட்சத்திரப் பதக்கம் (one Star). இரண்டு நட்சத்திரப் பதக்கம் (2 Stars) மூன்று நட்சத்திரப் பதக்கம் (Star Stars) என்றெல்லாம் வழங்கி, அத்துடன் நற்சான்றிதழ்களையும் வழங்கினர். இந்தத்தேர்வுப்போட்டிகளில் ஆர்வமுள்ள அத்தனை பேர்களும் கலந்து கொள்ளலாம். 1960ல் தொடங்கிய இந்த ஆற்றல் வளர்க்கும் திட்டம், அவ்வப்போது புதுப்புதுச்