பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அந்த இரத்தத்தைத் தொட்டுத்தான் எல்லோரும் விளையாட்டுப் போட்டி பற்றிய சபதத்தை (உறுதிமொழியை) எடுப்பார்கள். அவர்களின் உறுதிமொழிகள் எல்லாம், வெற்றி பெறுவதற்காக அல்லது தருவதற்காக, நாங்கள் எந்தவிதமான கீழ்த்தரமான செயல்களிலும், ஈடுபடமாட்டோம் என்கிற தன்மையில் தான் அமைந்திருக்கும். போட்டியிடுபவர்கள் அனைவரும் நாங்கள் இந்தப் போட்டிகளில் வந்து பங்கு பெறுவதற்கு முன்பாக, 10 மாதம் இடைவிடாத பயிற்சிகளை செய்திருக்கிறோம் என்று உறுதி மொழி கூறிட போட்டிகளை நடத்தும் அதிகாரிகளும் நடுவர்களும், தங்களது நிர்வாக முறையில் நீதியும் நேர்மையுமே நிறைந்திருக்கும். நாங்கள் உண்மையாக, அதிலே உறுதியாக நின்று செயல்படுவோம் என்று சபதம் செய்வது முதல் நிகழ்ச்சியாக முடிவடையும். உறுதி மொழியைத் தொடர்ந்து, அணி வகுப்பு நடைபெறும் வாத்தியம் இசைத்து வழி நடத்துவோர் முன்னே நடக்க, அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகள் நடக்க, அவர்கள் பின்னே போட்டியாளர்க்ள வீர நடை நடந்து காட்டி அரங்கத்தினை வலம் வருவார்கள். பார்வையாளர்களும் வெகு ஆர்வத்துடன் காண அமர்ந்திருப்பார்கள். பார்வையாளர்கள் பக்கம் அணி நடை நடைபெறும் போது, ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் அறிவிப்பாளர் (Harald) அறிவிப்பார். அதாவது அந்தப் போட்டியாளர் பெயர், அவரது தந்தை, அவர் வாழும் நகரம் இவ்வாறு விவரம் அறிய பிறகு, இவரைப் பற்றிய தகவல் வேறு மாதிரி ஏதேனும் இருந்தால் அறிவிக்கலாம் என்று அறிவிப்பாளர் அறிமுகம் செய்து வைத்துப் பேசுவார். பார்வையாளர்கள் எதுவும் பதில் கூறாமல் பேசாமல் இருந்துவிட்டால், அந்தக் குறிப்பிட்டப் போட்டியாளர்