பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

 73


அதன்பின், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் போட்டியாளர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆங்கில எழுத்தின் அகரவரிசைப்படி உள்ள நாட்டினர் அணிவகுத்து நிற்பார்கள். ஒலிம்பிக் பந்தயத்தை உண்டாக்கி நடத்திய கிரேக்க நாட்டிற்குப் பெருமையளிப்பதற்காக, அணிவகுப்பில் கிரேக்கநாடு முதலிடம் பெறுகிறது. ஒலிம்பிக் பந்தயங்களை நடத்துகிற நாடு இறுதியாக நிற்கும் வாய்ப்பினைப் பெறுகிறது.

விழாத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அணிவகுப்பு முடிந்ததும் தலைவருக்கு எதிரே

உள்ள விளையாட்டுத் திடலில் அதிகாரிகள் மற்றும் போட்டியாளர்கள் வந்து நிற்கிற வைபவம் நடைபெறுகிறது.

அதன் பின், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிற அமைப்புக் குழுவின் தலைவர், விழாத்தலைவரை நோக்கி விளையாட்டுகளைத் துவக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.

விழாத் தலைவர் வந்து - இந்த ஒலிம் பிக் பந்தய விழாவினைத் துவக்கி வைப்பதில் பெருமையடைகிறேன் என்று அறிவித்தவுடன், இன்னிசை எங்கும் முழங்க, ஒலிம்பிக் கொடியானது கம்பத்தில் ஏற்றப்படுகிறது.

அதனைப் பெருமைப்படுத்த குண்டுகள் வெடிக்கப் படுகின்றன. சமாதானப் புறாக்களும் பறக்கவிடப் படுகின்றன. இந்நிகழ்ச்சிக்குப்பிறகு ஒலிம்பிக் தீபமானது வெளியிலிருந்து அரங்கத்திற்குள் ஏந்தி வந்து, ஒலிம்பிக் தீபம், அதற்குரிய இடத்தில் ஏற்றப்படுகிறது. இந்த ஒலிம்பிக் தீபம், பந்தயங்கள் நடைபெற்று முடிகிற 16 நாட்களும் எரிந்து கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு நாட்டின் அணியின் தலைவரும் தாம் ஏந்திய தாய்நாட்டுக் கொடியுடன் முன்னதாக உள்ள இடத்திற்கு