பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உலக வரலாற்றில்


மூன்றாவது வயதிலேயே பெற்றோர்களை இழந்து, ஆனாதையானார்! அதனால் தாய்மாமனால் வளர்க்கப்பட்டார்.

இளம் வயதிலேயே தாய்தந்தையை இழந்த டிவேலரா, அங்குள்ள மக்களது அனுதாபத்தாலும், மாமனின் அன்பாலும் சிறிதுசிறிதாக கல்விப் பயிற்சி பெற்றுத் தேர்ந்து, கல்லூரிக் கல்வியையும் அரும்பாடு பட்டுப் பெற்று, பிறகு அமெரிக்கக் கல்லூரியிலே கணிதப் பேராசிரியர் பதவியைப் பெற்று பணியாற்றி வந்தார்!

இவ்வாறு கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, அரசியல் துறையிலே ஆர்வம் கொண்டார். அதற்கான வாய்ப்புகளும் அவரை அப்போது தேடி வந்தன.

கி.பி.1910-ஆம் ஆண்டில், தனது தாயின் தாய்நாடான அயர்லாந்து வந்து சேர்ந்தார். அப்போது அந்த நாட்டில் தேசிய எழுச்சிப்போர் பரவலாக உருவாகிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

அந்த தேசிய எழுச்சியிலே கூட அவர் ஈடுபடாமல், மக்களுக்கு சேவை புரியும் இயக்கத்திலே சேர்ந்து, பொதுநலத் தொண்டிலே ஈடுபட்டார். பெயர் தான் மக்கள் பொது நலத் தொண்டு. ஆனால், அந்தத் தொண்டிலே தீவிரமாக ஈடுபட்டுச் சேவை புரிந்தவர்கள். பலர் தங்களது உயிர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதற்குக் காரணம்,