பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

89



பிரிட்டிஷ் சட்டசபைக்கான தேர்தல், 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிவேலரா கிஷேர் என்ற மாநிலத்தின் தொகுதியிலே இருந்து போட்டியிட்டு வாகைசூடினார்.

வெற்றிபெற்ற டிவேலரா, “சட்டமன்றத்தில் இருந்து கொண்டே அயர்லாந்து சுதந்திரத்திற்காக வாதாடிப் போராடி நாட்டை மீட்பேன்” என்று சங்க நாதம் செய்தார்! மக்கள், தங்கள் தலைவனின் தளராத போராட்ட உணர்வைக் கேட்டுப் போற்றி மகிழ்ந்தார்கள்.

ஆங்கில சட்டசபையில் அயர்லாந்தின் சுதந்திரம் பற்றி முழக்கமிட்டதற்காக, 1918-ஆம் ஆண்டின் போது டிவேலரா கைது செய்யப்பட்டார். ஏன் கைது செய்யப்பட்டார்?

அந்த நேரத்தில் ஜெர்மனி நாட்டுடன் பிரிட்டிஷ் கடும் போரில் ஈடுபட்டிருந்தது. அயர்லாந்து நாட்டு மக்கள் ராணுவச் சேவைக்காக கட்டாயமாகச் சேரவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி கட்டாயக் கட்டளையிட்டது

இந்த ஏதேச்சாதிகார உத்தரவை எதிர்ந்து அயர்லாந்து நாடு வெடித்தெழுந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கிளர்ச்சி வீறிட்டது. இந்த உத்தரவை எதிர்ந்து டிவேலரா வீரமுழக்கம் செய்து மக்களை விழிப்படையச் செய்தார் என்ற காரணத்தைக் குற்றமாகச் சாட்டி அவரைக் கைது செய்தது ஆங்கில ஆட்சி!

பிரிட்டிஷ் ஆட்சியின் ஏகாதிபத்திய ஆணவத்தின் முதுகெலும்பான இந்தக் கட்டாயக்கட்டளையை எதிர்த்துக்