பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்த்துணை

101

அந்த நஞ்சைச் சிவபெருமான் எடுத்து விழுங்கிவிட்டான். முருகப்பெருமான் அவனுடைய குமாரன். அந்தக் குடும்பம் முழுவதுமே உயிரைக் கொள்ளை கொள்ளும் பொருள்களை விழுங்கும் பேராற்றல் உடையது என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார். சிவன் நஞ்சை விழுங்கினான்; முருகன் யமனையே விழுங்கி விடுவான்.

அறுமுகவன்

'பாற்கடலில் அன்று எழுந்த விஷத்தைக் குடித்த சிவபெருமானுடைய குமாரன் இத்தகைய துணிவை எனக்குத் தருகிறான்' என்று அருணகிரியார் சொல்கிறார். "அவன் ஆறுமுகம் உடையவன். எந்தப் பக்கத்திலிருந்து எனக்குத் துன்பம் வந்தாலும் அந்தப் பக்கத்திலிருந்து எதிர்த்து எனக்கு நலம் செய்கின்றவன். நான்கு திசைகளும், மேல் கீழ் என்ற திசைகளும் சேர்ந்து ஆறு திசைகள் உண்டு. எந்தத் திசையிலிருந்து எப்படித் துன்பம் வந்தாலும். அந்தத் திசையை நோக்கியுள்ள அவனது திருமுகம் எனக்கு வரும் துன்பத்தை நீக்கிவிடும் என்று நினைக்கும் படியாக அறுமுகவன் என்று சொல்கிறார்.

கடல்மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன், அறுமுகவன்,

வேலும் கையும்

வனுடைய கையில் இருப்பது வேல். அதை வீசிக் காலனைச் சங்காரம் பண்ணிவிடுவான். "வேல் நான் பயப்படுவதற்குக் காரணமாகிய காலனைக் கொல்லும். கையோ எனக்கு அஞ்சேல் என்று அபயத்தைக் காட்டும்.' பயப்படாதே என்று வாயினால் மாத்திரம் சொல்லிவிட்டு கம்மைக் காப்பாற்றுவதற்குரிய காரியங்களைச் செய்யாமல்