பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

உள்ளம் குளிர்த்தது

இருக்கும் வார்த்தை வீரர்களைப் போன்றவன் அல்ல அறுமுகவன். அவன் ஒருகையால் அஞ்சேல் என்று சொல்லிக் கொண்டே மற்றொரு கையில் எல்லாப் பயத்தையும் போக்குகின்ற வேலாயுதத்தை வைத்திருக்கிறான்.

"பயந்த தனி

வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே"

என்று நமக்கு உறுதுணையாக ஒரு பாடலில் வேலையும் சொல்லியிருக்கிறார். அந்த வேல் நமக்கு வரும் பயத்தைப் போக்கி, நெஞ்சில் தைரியத்தைத் தரும்.

அந்த வேல் காலனைக் குத்த வேண்டும் என்பது கூட இல்லை. அதற்கு அவசியமே இராது. நம் உள்ளத்தில் அறுமுகவனுடைய வேலும், அஞ்சேல் என்ற திருக்கரமும் தியானத்தில் இருக்குமானால் நம் பக்கத்தில் காலன் வரமாட்டான். அந்தத் துணை இருப்பதனால் காலனால் உண்டாகின்ற அச்சமே நமக்கு வராது. நோய்க்கு மருந்து உண்பது வேறு: நோய் வராமல் காப்பாற்றுவதற்குரிய உணவுகளை அருந்துவது வேறு. முன்னையது நோய் நீக்கம்; பின்னையது நோய் வராமல் பாதுகாத்தல். இங்கே சொல்வது பாதுகாப்பு. 'காலன் என்னைச் சாட வரும்போது, முன்பு சிவ பெருமான், காலால் அவனை உதைத்தது போல, ஆண்டவன் வேலால் சங்காரம் பண்ணுவான்' என்று எண்ணிச் சொன்னது அன்று இது. 'வேலையும், திருக்கையையும் நம்பி இருக்கின்ற என் நிலை அறிந்து காலன் என் பக்கம் வரமாட்டான். ஆகவே அவனுக்கு அஞ்ச வேண்டியதில்லை' என்ற குறிப்பையே இது கொண்டிருக்கிறது.

நமக்கு அச்சம் வராமல் காப்பாற்றி, நெஞ்சைத் திண்மையுடையதாக ஆக்கி, மேலும் மேலும் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையும் அன்பும் உறுதியாக உண்டாகும்படி செய்வன முருகப்பெருமானுடைய வேலும்,