பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

117

பழங்காலத்தில் நூல் என்பது இலக்கணம் ஒன்றுக்குத்தான் பெயராக இருந்தது. பிற்காலத்தில் எல்லா வகையான பனுவல்களுக்கும் வந்தது. அருணகிரியார் காலத்திலேயே நூல் என்ற பெயர் இலக்கண இலக்கியங்கள் எல்லாவற்றையுமே குறித்ததனால், இந்தப் பிரபந்தத்தை நூல் என்று சொன்னார்.

நன்னூல் என்று தம்முடைய நூலைத் தாமே சொல்லலாமா என்ற கேள்வி எழும். முருகப்பெருமானுடைய புகழைச் சொல்வதனால் இது நல்ல நூல் என்பதில் ஐயம் இல்லை. கங்கையில் உள்ள தண்ணீரை ஒரு மன்னன் தங்கக் கிண்ணத்தில் எடுத்து வருகிறான். வேறு ஒரு செல்வன் வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வருகிறான். பின்னும் ஒரு வியாபாரி வெண்கலக் கிண்ணத்தில் எடுக்கிறான். ஓர் ஏழை மண் சட்டியில் எடுத்து வருகிறான். எடுக்கின்ற பாத்திரங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தூயனவாக இருந்தால் எடுத்துவரும் கங்கை எல்லாவற்றிலும் ஒன்றுதான். அதுபோல் பாடுபவர்களுடைய நிலை எப்படி இருந்தாலும் தூய்மையான மனத்தோடு பாடினால் கந்தப்பிரானுடைய புகழ் எப்போதும் நன்மையையே தரும். ஆகையால்,

கந்தன் நன்னூல் அலங்காரம்

என்று சொன்னார். தாம் பாடியதனால் நல்ல நூல் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை; கந்தனுக்கு அலங்காரமாக இருப்பதால் இது நல்ல நூல் ஆயிற்று என்று சொன்னார். இதனை நூறு என்ற வரையறையுடன் பாடினார். ஆகையால்,

நூற்றுள் ஒரு கவிதான் கற்று அறிந்தவரே

என்று பாராயணம் செய்பவருடைய முறையைச் சொல்கிறார். கற்றல் வேறு, ஓதுதல் வேறு, படித்தல் வேறு. ஒரு முறை படிப்பது படித்தல். பல முறை படித்தல்