பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

127

அப்படிச்சொன்னவுடன்தான் ஏதோ அபாயரிகழ்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது."நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"இரண்டு இடங்களில் வந்த ஆபத்தினின்றும் நீங்கி நாம் உயிர் பிழைத்தோம். அதற்குக் காரணம் நீங்களே" என்று அவர் சொன்னார்.

அப்போதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. "சொல்லுங்கள்" என்றேன்.

"நான் பொலன்னருவாவிலேயே சொன்னேன்; அங்கே தங்கிவிட்டு விடியற் காலையில் போகலாம் என்றேன். இவர்கள் கேட்கவில்லை. நாம் வந்த இடம் அடர்ந்த காடு. யானைகள் உள்ள இடம். அநேகமாக இரவில் யாரும் அங்கே காரை ஓட்டிக்கொண்டு போகமாட்டார்கள். யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்வதும் உண்டு; தனியாகச் செல்வதும் உண்டு. அவசியம் நேர்ந்து காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, யானைகள் வருவது தெரிந்தால் காரின் விளக்கை அணைத்துவிட்டுக் காரை அங்கேயே நிறுத்திவிடுவார்கள். யானைக்கூட்டம் போன பிறகுதான் காரை ஓட்டிச் செல்வது வழக்கம். இவற்றை எல்லாம் அறிந்தே இப்போது போகவேண்டாம் என்று சொன்னேன்."

"நடந்ததைச் சொல்லுங்கள்" என்று நான் தூண்டினேன்.

"அதைத்தான் சொல்ல வருகிறேன். கார் வந்து கொண்டிருந்தபோது பக்கத்தில் மளுக் என்று ஒரு யானை ஒரு மரத்தின் கிளையை ஓடித்தது எனக்குக் கேட்டது. யானை தான் கிளையை ஒடிக்கிறது என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தேன். என்ன செய்வது என்று சற்றே