பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

131

சொல் கடந்து, பொருள் கடந்து,உணர்ச்சி கடந்து, வாழ்க்கையில் நற்பயனைத் தருவதாக அமைந்திருக்கிறது. ஆகவே, அவர் பாடுகின்ற இந்தப் பயன், சொல்லளவில் நில்லாமல் நூற்றுக்கு நூறு உண்மையான நிகழ்ச்சியாக அநுபவத்தில் காண்பதற்குரியது.

சலம்காணும் வேந்தர் தமக்கும் அஞ்
சார்;யமன் சண்டைக்கு அஞ்சார்;
துலங்கா நரகக் குழி அணு
கார்;துட்ட நோய் அணுகார்;
கலங்கார் புலிக்கும் கரடிக்கும்
யானைக்கும்; கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவி
தான்கற் றறிந்தவரே.

[தமக்குள்ளே பகையை உண்டாக்கும் கொடுங்கோல் மன்னர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; யமன் மரண காலத்தில் வந்து துன்புறுத்தும் சண்டைக்கும் அஞ்சமாட்டார்கள்; ஒளியற்ற நரகமென்ற துன்பக்குழியின் பக்கத்தில்கூடப் போகமாட்டார்கள்; தீர்வதற்கரிய கொடிய நோயை அடையமாட்டார்கள்; புலி கரடி யானை இவற்றுக்கும் கலங்கமாட்டார்கள்; கந்தனைப்பற்றிய நல்ல நூலாகிய இந்த அலங்காரத்தில் உள்ள நூறு கவிகளுக்குள் ஒரு கவியை யேனும் சுற்று அதன் வழி நிற்க அறிந்தவர்கள்.

சலம் - பகை. தமக்கும் என்றது உயர்வு சிறப்பும்மை. வேந்தருக்கே அஞ்சார் என்றால் மற்றவர்களுக்கு அஞ்சாமை சொல்லவேண்டியதில்லை. துலங்கா - ஒளியற்ற; துலக்கம்-ஒளி. நரசுக்குழி: "எரிவாய் நரகக் குழியும்" என்று முன்பும் ஒரு பாட்டில் கூறினார். தான்: அடை.

அறிந்தவர் அஞ்சார், அஞ்சார், அணுகார், கலங்கார் என்று முடியும்.]