பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

13

"தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டு இருக்கும்
  சுத்த ஞானம் எனும், தண்டையம் புண்டரிகம் தருவாய்"

என்று கந்தர் அலங்காரத்தில் வந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

முருகப் பெருமானுடைய திருவடியைத் தரிசித்து, அதன் அருகில் தோன்றும் வேலைப் பற்றிக்கொண்டு மெல்ல நம்முடைய கண்ணையும் கருத்தையும் ஏறவிடுவோம். அதன் வழியே செல்லும் கண் முதலில் அவன் திருவடியைக் கண்டு, பின்பு அவன் இடையைக் கண்டு, பின்பு அவன் திருக்கரத்தில் வந்து நிற்கும். முருகன் எப்பொழுதும் வேலைத் தன் கையில் பற்றியிருக்கிறான்.

"வேலே விளங்கு கையான்,"


கிரௌஞ்ச வதம்

வன் திருக்கரத்தில் பற்றிக்கொண்டிருக்கும் அந்த வேலைப் பார்க்கும்போது பழைய கதை நினைவுக்கு வருகிறது. அதே திருக்கரத்தினால் முருகப்பெருமான் வேலை ஓச்சிப் பல பராக்கிரமச் செயல்களைக் காட்டினான். அவற்றுள் கிரியார் இங்கே ஒன்றை நினைப்பூட்டுகிறார்.

சிலம்பு ஊடுருவப் பொரு வடி வேலும்.

முருகப்பெருமான் வேலினால் அசுரர்களை மாய்த்தான். கிரௌஞ்சாசுரன் என்பவன் மலை வடிவில் இருந்தவன். அவன் சூரனுக்குப் பக்கபலமாக இருந்து தேவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தவன். அசலமாக இருக்கும் மலை அன்று அது. இறகுகளைக் கொண்டு பறந்து கொண்டே இருந்தது அது. அதனால் அசலம் என்னும் பெயர் கிரௌஞ்ச கிரியைப் பொறுத்தவரையில் செல்லாது. பல இடங்களுக்குப் பறந்து சென்று அங்கங்கே திடும்