பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

17

முருகப்பெருமானுடைய வீரத்துக்கு அடையாளமாக இருப்பன அவனுடைய திருத்தோள்கள். அந்தத் திருத்தோளுக்கு அலங்காரமாக இருப்பது கடம்பமாலை. அந்த இரண்டையும் இப்போது நமக்குக் காட்டுகிறார்.

கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்.

முருகனுக்குக் கடம்ப மலர் மிகவும் பிரியமானது. அவன் திருத்தோளில் கடம்ப மலர் மாலை இருக்கிறது. அவன் கடம்ப மலரில் இருக்கிறான். கடம்ப மரத்தின் அடியிலும் அவன் எழுந்தருளியிருப்பான். திருமுருகாற்றுப்படை,

"புதுப்பூம் கடம்பும்"

என்று முருகன் இருக்கும் இடங்களில் கடம்ப மலரையும் ஒன்றாகச் சொல்கிறது.

"கடம்பமர் காளை"

என்பது தேவாரம். முருகன் அணிகின்ற மலர்களில் சிறந்தது கடம்ப மலர். அதனால் கடம்பன் என்ற திருநாமத்தைப் பெற்றான்.

"காரலர் கடம்பன்"

என்று மணிமேகலையில் வருகிறது. அதனை எப்போதும் அவன் அணிந்துகொண்டிருக்கிறான். அது போகத்திற்குரிய மாலை என்று நச்சினார்க்கினியர் திருமுருகாற்றுப்படை உரையில் எழுதுகிறார். போர் செய்யும்போது அணிகின்ற மாலை வேறு. மற்றக் காலங்களில் அணிகின்ற மாலை வேறு, முருகன் போர் செய்யும் காலத்தில், காந்தளை அணிவான். அது அவனுக்குரிய கண்ணி. மற்றச் சமயங் களில் கடம்ப மாலையை அணிந்து கொள்வான்.

தண்டையின் ஒலியைக் கேட்டுத் திருவடியைக் கண்டது போலக் கடம்ப மலரின் மணத்தை நுகர்ந்து

2