பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

19

பன்னிரண்டு தோள்களும் விளக்குகின்றன. அவற்றையும் தரிசித்தோம்.

ஆறுமுகம்

தோள்களைக் கண்ட பிறகு அடுத்தபடி நம்முடைய பார்வை உயர்ந்தால் அவனுடைய திருமுகங்கள் ஆறும் தோன்றும். அந்த ஆறு முகங்களும் மணம் பொருந்திய தாமரை போல ஒளிர்கின்றன. மணம் மனத்தை லயப்படுத்தும். அதனால்தான் பூசை செய்கிறவர்கள் மெல்லிய மணமுள்ள ஊதுவத்தியை ஏற்றி வைத்துக் கொள்கிறார்கள். நெடியான மயக்க மருந்தால் மனம் நின்று விடுகிறது. மென்மையான மணத்தினால் மனம் அமைதி பெறுகிறது. முருகப் பெருமானுடைய திருமுகம் மனத்தில் அமைதியை உண்டாக்கும் மணம் பொருந்தியது.

மருவடிவான வதனங்கள் ஆறும்.

மருவைப் பெற்ற வடிவையுடைய ஆறுமுகங்களும் என்று பொருள் கொள்ளவேண்டும்.

கண்கள்

திருமேனியில் முகம் முக்கியமானது. ஆண்டவனுடைய திருவடியைப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல நம்முடைய பார்வையை உயர்த்தி ஏற்றிக்கொண்டு வந்தோம். இப்போது திருமுகத்தில் வந்து நிற்கிறோம். முகத்தில் முக்கியமானது கண். இறைவனுடைய அருளைப் புறப்படவிடுகின்ற பொய்கைகள் அவை. அவனுடைய திருக்கண் பார்வை பட்டால் நம்முடைய தீங்குகள் எல்லால் அழியும். அருள் கொப்புளிக்கும் திருக்கண்களைப் பார்த்த பிறகு வேறு எதையும் பார்க்க முடிகிறது இல்லை. நம்முடைய கண்ணும், அவனுடைய