பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உள்ளம் குளிர்ந்தது

அதுதான் இப்போது பார்க்கப் போகிற பாட்டு. "எம் பெருமானே, உன்னுடைய அழகிய உருவத்தை நல்ல வகையில் இருந்து தியானம் பண்ணுகின்ற பக்குவத்தை எனக்குத் தா" என்ற வேண்டுகோளை உடையது இந்தப் பாட்டு.

இராப்பகல் அற்ற இடங்காட்டி யான் இருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள் அரு ளாய்கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே.

இது இறைவனுடைய தியானத்தில் ஈடுபடவேண்டுமென்ற ஆசை உடையவர்களுக்குச் சொல்கிற பாட்டு. அவர்களே பகவானிடத்தில் சொல்லி வேண்டிக் கொள்வது போல அருணகிரிநாத சுவாமிகள் இந்தப் பாட்டை அமைத்திருக்கிறார்.

தராசின் நிலை

ம்பெருமானுடைய திருவுருவத் தியானம் செய்வதானால் மனத்திற்கு ஒரு பக்குவம் வேண்டும். தராசின் நிலைபோல அந்தப் பக்குவம் இருக்கும். தராசில் இரண்டு பக்கமும் தட்டுகள் இருக்கும். நுட்பமான பொருள்களை நிறுக்கவேண்டுமானால் நுட்பமான தராசில் நிறுக்கிறோம். தங்கம் வைரம் முதலியவற்றைச் சின்னத் தராசில் வைத்து நிறுப்பார்கள்.நிறுப்பதற்கு முன்னால் தராசைத் தூக்கிப் பார்ப்பார்கள். அது சமமாக இருக்கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகே நிறுக்கத் தொடங்குவார்கள். இதை வள்ளுவர் சொல்கிறார்;

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்"

என்று உவமையில் வைத்து அந்த வழக்கத்தைக் காட்டுகிறார். போட்ட பொருளின் எடையைச் சரியானபடி காட்டவேண்டுமானால் எடையைப் போடுவதற்கு முன்பு தராசைத் தூக்கினால் இரண்டு பக்கத்துத் தட்டும்