பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

25

சமமாக இருக்கவேண்டும். முதலில் சமமாக இருக்கிறதா என்று பார்த்த பிறகே பொருளையும் எடையையும் போட்டு நிறுப்பார்கள். அதுபோல் இறைவனுடைய திருவருளை நம் உள்ளத்தில் தாங்கிக் கொள்ள வேண்டுமானால் நம்முடைய உள்ளம் நடுநிலையில் இருக்க வேண்டும். பிற பொருள்களை நாடி அலைந்து கொண்டிருந்தால் இறைவனுடைய உருவத்தைப் பதித்துக் கொள்ளமுடியாது.

சுவரும் சித்திரமும்

ழுக்கு அடைந்த சுவரில் சித்திரங்களைத் தீட்ட முடியாது. ஓவியர்கள் முதலில் சுவர் முழுவதும் சுண்ணாம்பு அடிப்பார்கள். சுவர் ஒரே வெள்ளையாக ஆனபிறகு அதில் தாம் எழுத வேண்டிய வண்ணச் சித்திரங்களை எழுதுவார்கள். நம்முடைய மனமாகிய சுவரில் இறைவனுடைய திருவுருவத்தை எழுதவேண்டுமானால் முதலில் அங்குள்ள அழுக்கைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

"துணிவெளுக்க மண் உண்டு
எங்கள் முத்து மாரியம்மா
தோல்வெளுக்கச் சாம்பல்உண்டு
எங்கள் முத்து மாரியம்மா
மணிவெளுக்கச் சாணையுண்டு
எங்கள் முத்து மாரியம்மா
மனம் வெளுக்க வழியில்லை
எங்கள் முத்து மாரியம்மா"

என்று சொல்வார் பாரதியார். நம்முடைய மனத்தில் எத்தனையோ நிறங்கள் ஏறியிருக்கின்றன. சிவப்பும். கறுப்பும் நடமாடிக் கொண்டிருக்கின்றன. சிலருடைய மனத்தில் பச்சைவண்ணம் நிரம்பியிருக்கும். மனத்தில் தோன்றுகிற எண்ணங்களுக்கு வண்ணம் உண்டென்று மேல் நாட்டினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதைப் பற்றி விவரமான புத்தகம் ஒன்றை அடையாற்றில் வெளி