பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உள்ளம் குளிர்ந்தது

யிட்டிருக்கிறார்கள். மனம் வண்ணங்கள் நிறைந்ததாக இருந்தால் புதிய சித்திரத்தை எழுத முடியாது. எழுதினாலும் மங்கிப் போய்விடும். ஆதலால் முதலில் மனத்தை எந்த வண்ணமும் இல்லாமல் சுத்த சத்துவமாக அமையும்படி வெள்ளை அடிக்கவேண்டும். வெள்ளை அடிப்பதாவது என்ன? மனம் விருப்பு வெறுப்பு இல்லாமல், எதனையும் சாராமல் அமைதியாக, மௌனமாக, நடுநிலையில் இருக்க வேண்டும்.

சுகமும் துக்கமும்


ப்போது நம்முடைய மனம் சுகம் வந்தால் துள்ளிக் குதிக்கிறது; துக்கம் வந்தால் சோர்ந்துவிடுகிறது. ஒருநாள் மிகவும் உற்சாகமாகவும், மற்றொரு நாள் மிகவும் வாட்டமாகவும் இருக்கிறோம். இப்படி இருப்பதற்குக் காரணம் மனந்தான். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் உலகத்தில் நம்முடைய மனம் அலைபோல அலைகிறது; மேடுபள்ளத்தோடு இருக்கிறது. ஏழையானாலும், பணக்காரனானாலும் சுகதுக்கம் என்பவை பொதுவானவையே. மனம் அந்த இரண்டுக்கும் ஏற்றபடி மேலேறிக் கீழே இறங்குகிறது. இப்படி இரண்டு விதமான அலைகள் மனத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. கிளர்ச்சியும் தளர்ச்சியும் இல்லாமல், அலையற்ற கடல்போல மனம் அமைந்து கிடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனுடைய திருவுருவத்தை எழுதலாம்.

"உயிரா வணம் இருந் துற்று நோக்கி
உள்ளக் கிழியின் உரு எழுதி"

என்று பாடுகிறார் அப்பர்.

நடுநிலை

பெரியவர்களுக்கு மனம் நடுநிலையில் நிற்கும். யற்ற கடல்போல அமைதியாக இருக்கும். ஒருவன் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான். உச்ச ஸ்தாயியில்