பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

உள்ளம் குளிர்ந்தது

நிற்கும். யாரோ ஒருவரிடம் கடன் வாங்கினது அப்போது தான் நினைவுக்கு வரும். பத்து வருஷங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி திடீரென்று வந்து நிற்கும். முதல் நாள் போயிருந்த வீட்டின் முற்றத்தில் போய் மனம் நிற்கும். இப்படிப் புறத்திலிருந்தும், உள்ளத்திலிருந்தும் பலபல தடைகள் வந்து தாக்கும். மனம் ஒருமைப்படுவது மிகவும் அருமையாக இருக்கும்.

தூக்கம்

ப்படியோ இந்த எண்ணங்களை எல்லாம் மாற்றி, காதில் சப்தம் விழுந்தாலும் கேட்காதபடி மனத்தை ஒருமைப்படுத்துகிறோம். அப்போதும் ஓர் ஆபத்து இருக்கிறது. மனம் ஒருமைப்படுவது போலத் தோன்றிப் பிறகு தூக்கம் வந்துவிடும். தூங்குகிறவனுக்கு எந்த விதமான சப்தமும் கேட்காது. உட்கார்ந்தபடியே தூங்கத் தலைப் பட்டால் தியானம் எங்கே உருப்படப்போகிறது? ஆண்டவனுடைய திருவுருவத்தைப் பற்றிக் கொண்டு மற்றவற்றை எல்லாம் மறந்து நின்றால் மட்டுமே எவ்விதத் தடையும் வராது; தூக்கமும் வராது. ஆனால் அந்த நிலை வருவது மிகவும் கடினமானது. பல பல எண்ணங்களை எண்ணுவதும், புறத்திலிருந்து வருகிற ஒலிகளைக் கேட்பதும் ஆகிய இவைகள் உள்ள நிலை ஜாக்கிர நிலை. தூக்கம் வருவது கேவலநிலை. இந்த இரண்டையும் சகலகேவலம் என்று சொல்வார்கள். ஒன்றையே பற்றி நின்று தியானிக்கும்போது சகலகேவலம் அற்றநிலை உண்டாகும். அதையே இரவு பகல் அற்ற இடம் என்று அருணகிரியார் சொல்கிறார். அந்த இடத்தில் வெளியிலிருந்து வரும் தடைகளும் இரா. உள்ளே இருந்தும் எந்தத் தடையும் வராது. தூக்கமும் வராது. மனம் ஒருமைப்பட்டு இறைவனுடைய திருவருள் தியானத்தில் ஈடுபட்டால் தூக்கத்திற்கு இடம் இல்லை.