பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

37

துதிக்க வேண்டும். இங்கே, துதித்தல் என்பது தியானத்தைக் குறிப்பது. அமைதியாக இருந்து தியானம் செய்ய வேண்டும். அப்படித் தியானம் செய்வதற்கு ஒரு பற்றுக் கோடு வேண்டும்.

நல்ல இடத்தில் உட்கார வைத்து, அமருவதற்கு ஏற்ற வசதியும் செய்து, துதிப்பதற்கு முயற்சியும் செய்யச் செய்து விட்டால் பயன் இல்லை. இவ்வளவுக்கும் லட்சியமாகிய அல்லது பற்றுக்கோடாகிய ஒரு பொருள் வேண்டும். அது தான் குராப்புனை தண்டையந்தாள்.

நான் இருந்தே துதிக்க

என்று சொல்கிறார். இருத்தல் என்பதற்கு உடம்பு அசையாமல் இருப்பது என்பது மாத்திரம் பொருள் அன்று. மனத்தாலும் சஞ்சாரம் செய்யாமல் அமைதியாக இருத்தல் என்று பொருள் கொள்ளவேண்டும்.

"மனம் அடங்கும் திறத்தினில் ஓரிடத்தே இருந்தறியேன்"

என்று இராமலிங்க சுவாமிகள் இந்த நிலையைச் சொல்கிறார்.

மனம் அடங்கும் வகையில் ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். அட்டாங்க யோகத்தில் மூன்றுவது பயிற்சியாக ஆசனத்தைச் சொல்வார்கள். இயமம் நியமம், ஆசனம் என்று வரும். மனம் சூட்சுமமாக இருப்பது, அதைப் பக்குவப்படுத்தி ஒரு நிலையில் வைப்பதற்குச் சாதனம் செய்ய வேண்டும். அமைதியாக அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.


தாள் அருளாய்

குழந்தையிடத்தில் காகிதம் கொடுத்தாலும் கிழித்து எறிந்துவிடும்; நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாலும் கிழித்துவிடும். வெறும் காகிதத்திற்கும், நூறு ரூபாய்