பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணாரக் காணும் காட்சி

47

நெருங்கி வாழுகின்ற மனைவியைக் கூடத் தனியே இருந்து நினைத்தால் அவள் உருவம் அப்படியே தோன்றுவது இல்லை. மனத்திற்குத் தெளிவாகக் காணும் நிலை கிடையாது என்று சொல்ல முடியாது. கனவில் அதே மனம் பல பொருள்களைக் காணும்போது அவை மிகத் தெளிவாகவே தோற்றுகின்றன. அதற்குக் காரணம்: மற்ற இந்திரியங்கள் வேலை செய்யாமல் மனம் அப்போது தனி நின்று காண்கிறது. அப்படித்தான் புறத்திலுள்ள ஒலி முதலியவற்றில் உள்ளத்தைச் செலுத்தாமல், மனத்திலே வேறு எண்ணங்களைக் கொள்ளாமல், புறத்தில் கண்ணால் கண்ட திருவுருவத்தை உள்ளத்தில் பதித்துக் கொள்ளப் பழகவேண்டும். அப்படிப் பழகினால் ஆண்டவன் கோயிலை விட்டு வெளியே வந்து வேறு ஓரிடத்தில் தனியே உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டால், அந்த உருவத்தைப் பார்க்கலாம். பலகாலப் பழக்கத்தினால் உள்ளக் கிழியில் அந்தத் தோற்றம் வரும்படி செய்து கொள்ளலாம். அந்த நிலை வந்ததைத்தான். 'எம்பெருமான் தன்னுடைய திருவடி முதலியவற்றோடு வந்து குருவடிவாக என் உள்ளம் குளிரக் குதி கொண்டான்' என்று முதல் பாட்டில் சொன்னார். இது உள்முகத்தில் தோற்றுகின்ற தோற்றம். அந்தத் தோற்றம் வெளியிலும் தோற்றும் ஒரு தனி அநுபவத்தை இப்போது சொல்ல வருகிறார்.

அதைப் படித்தால் முதலில் நமக்கு விளங்காது. சில உதாரணங்களைக் கொண்டு பார்த்தால்தான் விளங்கும். பசி மிகுதியாக இருக்கிறவனுக்குக் கண் இருட்டிக் கொண்டு வருகிறதென்று சொல்கிறோம். இங்கே வெளியில் இருட்டு இல்லை; ஒளி நிரம்பியிருக்கிறது. இருந்தாலும் உடம்பில் உள்ள பலவீனம் மனத்திலுள்ள சோர்வு எல்லாம் சேர்ந்து வெளியில் உள்ள பொருள்கள் மறைந்து போகும்படி கண்ணில் வந்து தாக்குகின்றன.