பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணாரக் காணும் காட்சி

49

காலத்தில் பிரிவினால் இரண்டு பேரும் வாடுவார்கள். காதலன் காதலியை நினைப்பான். காதலி காதலனை நினைப்பாள். அப்படி நினைக்கும்போது அவரவர்களுக்கு மற்றவரது உருவம் வெளியில் தோன்றுமாம்.

மனோ பாவம்

யாரோ ஒருவரை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். வீதியில் நெடுந்தூரம் நம் பார்வையைச் செலுத்திக் கொண்டிருப்போம். யாரோ ஒருவர் வந்து கொண்டிருப்பார். அவருடைய தோற்றம் நாம் பார்க்கிற ஆசாமியே என்று நினைக்கும்படியாக இருக்கும். ஆனால் பக்கத்தில் வந்தால் உண்மை புலனாகும். நாம் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அவருடைய பாவம் நம் மனத்தில் உறைந்திருப்பதனால் நாம் நெடுந்தூரத்தில் பார்க்கிறவரை நம்முடைய அன்பராகக் காண்கின்ற நிலை உண்டாகிறது. மனத்தில் உள்ள பாவந்தான் அதற்குக் காரணம். அது போலவே பரிபூரணமான அன்பு இருக்குமானால் ஒன்றும் இல்லாத இடத்திலும் நம்முடைய அன்புக்குப் பாத்திரமானவருடைய உருவம் தோன்றும். கம்பராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது.

இராமாயணக் காட்சி

சூர்ப்பணகையின் வாயிலாகச் சீதாபிராட்டியின் எழிலை இராவண்ன் கேட்டான். கேட்டவுடன் அந்தப் பிராட்டியிடம் ஆசை கொண்டான். அவன் சீதையைப் பார்த்ததில்லை. ஆனாலும் சூர்ப்பணகை வருணித்த வருணனையைக் கொண்டு எப்போதும் பிராட்டியின் நினைவாகவே இருந்தான்.ஒரு நாள் அவனுக்குத் திடீரென்று வெளியில் ஒரு பெண்ணின் தோற்றம் தோன்றியது. அந்த அழகிய தோற்றத்தைக் கண்டவுடன், அவள்தான் சீதை

4