பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணூக் காணும் காட்சி

53

திருமுகம் முதலியன

பின்பு தோன்றுவது எது? முருகப்பெருமான் திருமுகம் தோன்றுகிறதாம்.

திருமுகமும்.

எம்பெருமான் ஆறு திருமுகம் உடையவன். அவை தோன்றுகின்றன. அந்த முகங்களுக்கு இரண்டு பக்கமும் வரிசையாக உள்ள பன்னிரண்டு தோள்களும் தோன்றுகின்றன.

பங்கே நிரைத்தநல் பன்னிரு தோளும்.

எம்பெருமானுடைய வேல் தோன்றுகிறது. ஆறு முகங்களும் தோன்றுகின்றன. பின்பு பன்னிரு தோள்களும் தோன்றுகின்றன. "எங்கே நினைப்பினும் இவைகள் எல்லாம் தோன்றுகின்றன" என்கிறார்.

செங்கோட்டு வேலன்

அருணகிரிநாத சுவாமிகளுக்குத் திருச்செங்கோட்டு வேலனிடம் தனி அன்பு உண்டு. இதனை முன்பும் பல முறை பார்த்திருக்கிறோம். எந்தத் தலத்தையும் நினைக்காத அநுபூதியில் 'நாகாசல வேல்வனை' நினைக்கிறார். செங்கோட்டில் உள்ள எம்பெருமானைக் காண்பதற்கு நான்முகன் நாலாயிரம் கண் படைத்திலனே' என்று குறை பட்டதையும் நாம் கேட்டோம். அந்தச் செங்கோட்டு வேலனை இப்போது சொல்கிறார். அவர் மனம் அந்தத் தலத்தில் மிகவும் ஈடுபட்டிருக்கிறது. 'செங்கோட்டிலே எழுந்தருளியிருக்கும் முருகனை எங்கே நினைத்தாலும் அவனுடைய வேல் முதலியன தோற்றும்' என்று இந்தப் பாட்டில் சொல்கிறார்.

பதுமமலர்

கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து

எதிர்நிற்பனே.