பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உள்ளம் குளிர்ந்தது

என்பதும் ஆம். சினவடிவேல்: உடையானது சினம் கருவியின்மேல் ஏற்றப்பட்டது, சின்னமாகிய வடிவேல் என்றும் கொள்ளலாம். வடி - கூர்மை. பங்கு - பக்கம், நிரைத்த - வரிசையாக அமைந்த. பதுமமலர் : எழுவாய், பதுமமலர்க் கொங்கே' என்றும் பாடம். கொங்கு மணம் : பூந்தாதுமாகும். தரளம் -முத்து. செங்கோடை- திருச்செங்கோடு. எங்கே என்றது திருச்செங்கோடல்லாத பிற இடங்களை. எங்கே என்றதனோடு எப்பொழுது நினைத்தாலும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிற்பன் என்றது, மின்னலைப் போலே தோன்றி மறையாமல், நன்றாகத் தரிசித்து இன்புறும்படி நிற்பான் என்ற கருத்தை உடையது.]