பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பய பக்தி

க்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபக்தி என்ற தொடரை அடிக்கடி நாம் உபயோகிப்பது உண்டு. ஆனால் அதன் சரியான பொருள் இன்னதென்று பலருக்குத் தெரிவது இல்லை. யாரிடத்தில் பயம் உண்டாகிறதோ அவரிடத்தில் பக்தியும் உண்டாகவேண்டுமென்றே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தையினிடம் பய பக்தியாக நடந்து கொண்டான் என்பதுபோல உதாரணத்தையும் காட்டுகிறார்கள்.மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் சிலர், கடவுளிடம் பக்திகொண்டு வழிபடுவதற்கு மூலகாரணம் பயம் என்று எழுதியிருக்கிறார்கள். ஆதி மனிதன் இடி யைக் கண்டு பயந்தானாம். அதையே கடவுள் என்று போற்றினானாம். இவ்வாறு பயமும் பக்தியும் ஒரே பொருளிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பய பக்தி என்பதற்குப் பொருள் சொல்வார்கள். அது அவ்வளவு பொருத்தம் என்று எனக்குத் தோன்றவில்லை.

பயம் ஓரிடம் பக்தி வேறு இடம்

யமுள்ள இடத்தில் போலிப் பக்தி தோன்றுமே யொழிய உண்மையான பக்தி தோன்றாது. முரட்டு ஆள் ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அப்போது அவனிடத்தில் நாம் பயந்து போகிறோம். நயமாக அவனிடம் பேசுகிறோம். அந்தப் பயமும், நயமும் சேர்ந்து வருவதால் இரண்டும் உண்மையென்று எண்ணக் கூடாது. ஆள் முன்னால் இருக்கிற வரைக்கும் பயத்துடன் இருந்து நயந்து போவதுபோல் காட்டிக் கொள்வோம். அவன் அந்தப்புறம் நகர்ந்த பிறகு சிரிப்போம். பயம் உள்ள