பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உள்ளம் குளிர்ந்தது

இடத்தில் உண்மையான பக்தி இருப்பது மன இயல்புக்கு ஒத்தது அன்று. பசியிடம் பயம் இருந்தால் சோற்றினிடம் பக்தி உண்டாகும். பூச்சாண்டியிடம் பயம் உண்டாகும் குழந்தைக்கு அம்மாவிடம் அன்பு உண்டாகிறது. நோயிடம் பயம் உண்டாகும்போது அதைத் தீர்க்கும் மருத்துவனிடம் பக்தி உண்டாகிறது. ஆகவே பயம் ஒரிடத்திலும் பக்தி அதைத் தீர்க்கின்ற இடத்திலும் இருப்பது முறை. அந்த வகையில் பார்த்தால் இறைவனிடம் பக்தி வரும்போது அது பயபக்தியாக இருக்கவேண்டும். அதற்கு முன்பு பயம் உண்டாகவேண்டும்; அந்தப் பயம் வேறு ஓரிடத்தில் இருக்கவேண்டும்.

மரண பயம்

னிதனுக்குப் பலவகையான நிலைகளில் பயம் உண்டாகிறது. வயிற்றுப் பசிக்குப் பயந்து சாகிறான். மானத்திற்குப் பயப்படுகிறான். வறுமைக்குப் பயப்படுகிறான். இந்தப் பயங்களை எல்லாம் பெரிய வள்ளல்களால் தீர்த்துக்கொள்ளலாம். யாரிடமேனும் சோறு வாங்கியுண்டு பசியினால் உண்டாகும் பயத்தைப் போக்கலாம். உழைத்து வேலை செய்து பணம் சம்பாதித்து வறுமையினால் வரும் பயத்தைப் போக்கிக்கொள்ளலாம். நல்ல மருத்துவரை அண்டி நோயினால் வரும் பயத்தைப் போக்கிக்கொள்ள லாம். திருடர்களால் வரும் அச்சத்தைக் காவலர்களாலும் விலங்குகளால் வரும் அச்சத்தை ஆயுதங்களாலும் போக்கிக் கொள்ளலாம். இப்படி உலகத்தில் மனிதனுக்கு உண்டாகும் அச்சங்கள் பலவாக இருப்பதுபோல அவற்றைப் போக்கிப் பாதுகாத்துக்கொள்ளும் உதவிகளும் பலவாக இருக்கின்றன. ஆனால் இப்படி வரும் பயங்களுக்கு எல்லாம் மேலான பயமாக, யாராலும் மாற்ற முடியாத அச்சமாக இருப்பது மரண பயம். யமனால் உண்டாகும்