பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

அமரசிகாமணி; வீரமுடைய சேவகன்; வள்ளிக்கு வாய்த்தவன்; மயிலேறிய மாணிக்கம்; சிவ குமாரன்; ஆறுமுகவன்; நம்பினவருக்கு மெய்த்துணையாக வருபவன்.

இந்தப் பாடல்களில் திருச்செங்கோடு, திருத்தணிகை, திருச்செந்தில் என்னும் மூன்று தலங்களைப்பற்றிய செய்திகள் வருகின்றன. பதுமமலர் வாசனையையும் முத்துக்களையும் சொரியும் காட்சியைத் திருச்செங்கோட்டில் வைத்துக் காட்டுகிறார். திருத்தணிமாமலையில் வாவித் தடவயல் சூழ்ந்திருப்பதைச் சொல்கிறார். திருச்செந்தூர்க் கடல் ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிப்பதைப் பாடுகிறார்.

திருமால் கசேந்திரன் அழைக்க முதலையைக் கொன்று அதற்கு அருள் செய்தவராக நிற்கிறார். சிவ பெருமான் கடல் மீது எழுந்த ஆலம் குடித்த பெருமானாக விளங்குகிறார்.

பயபக்தி என்ற தொடருக்குப் பொருள் விளக்குவது போல அமைந்திருக்கிறது. "ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் அருட் பதங்கள், சேவிக்க என்று நினைக்கின்றிலேன்' என்பது, "திருவடியும் தண்டையும்" என்று தொடங்கும் பாடல் முருகனை உள்ளக்கிழியில் உருவெறுதிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்திருக்கிறது. கம் உள்ளத்துக்கு உறுதியை கூட்டி அஞ்சா மையை ஒழிக்கும் மந்திரமாக விளங்குகிறது. "சூலம் பிடித்து" என்று வரும் பாடல்.

வழக்கம் போல இந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு உரையாற்றும் போது கருதி, யுக்தி, அநுபவம் என்ற மூன்றையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பழைய அருளாளர்களின் திருவாக்குகள், பல நுட்பங்களை விளக்க ஒப்புமையாக வந்து உதவுகின்றன. உலகவாழ்வில் நாம் கண்ட அனுபவங்களிலிருந்து ஊகித்து யுக்தியினால் பல செய்திகளை உணர முடிகிறது. அத்தகைய இடங்களில் உவமைகளும் உதாரணங்களும் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன. முருகனை நம்பி வாழும் எளியேன் வாழ்வில் பெற்ற சில அநுபவங்களை இடையிலே