பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயபக்தி

69

அவன்பால் அன்பு செய்யவேண்டும். இப்படி அன்பு கொண்டு அது முறுகினால் சிறந்த பக்தியாகும். இதையே அருணகிரியார் சொல்ல வருகிறார்.

"எம்பெருமானே, எத்தனையோ பேர் கோயிலுக்குச் சென்று உன்னைத் தொழுகிறார்கள். அவர்களில் பல வகையினர் இருக்கிறார்கள். பரம்பரையாக வந்த பழக்கம் என்று கருதிக் கோயிலுக்குப் போய் உன்னைத் தொழுவார் சிலர். அயலார் மதிக்கிறார்கள் என்ற எண்ணத்தினால் தொழுவார் சிலர். கோயிலில் கிடைக்கும் பிரசாதம் முதலியவற்றை எண்ணித் தொழுபவர் சிலர். பிறர் செய்யும் நிர்ப்பந்தத்தினால் சென்று கோயிலில் தொழுவார் சிலர். இப்படி உன் அருள் நிறைந்த பாதங்களைக் கும்பிடுகிறவர்கள் பல வகையாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையாக உன்னைத் தொழுபவர்கள் ஆகமாட்டார்கள். இந்த உயிருக்கு ஒரு காலத்தில் மோசம் வந்துவிடும், நிச்சயமாக மரணம் என்ற ஒன்று நம்மை அறியாமலே வந்து சேரும் என்ற பயத்தை உண்மையாக உணர்ந்து, உன்னுடைய பாதங்களை யார் தொழுகிறார்களோ அவர்களே மெய்யான பக்தி உடையவர்கள். அப்படி நான் செய்யவில்லையே! பயபக்தியுடன் ன் திருவடியைத் தொழவேண்டுமென்ற நினைவுகூட எனக்கு இல்லையே!" என்று இரங்குகிறார்.

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன்

அருள் பதங்கள்

சேவிக்க என்று நினைக்கின்றிலேன்.

ஆவிக்கு மோசம்

பொருளுக்கு மோசம் வருமென்று, வீடு கட்டிக் கதவு அமைத்து அதற்குத் தாழ்ப்பாளும் போடுகிறோம் பெட்டி வாங்கிப் பூட்டுகிறோம்; பூட்டுக்கு மேல் பூட்டுப்