பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

88

இந்த உவமையைச் சற்றே விரித்துப் பார்க்கவேண்டும். இரண்டு பக்கமும் கொள்ளி உள்ள ஓரிடத்தில் எறும்பு நிற்பது போல் நான் நிற்கிறேன் என்று சொல்கிறார். அந்த இரண்டு தலைகள் எவை? பலவற்றைச் சொல்லலாம்.

இரு தலை

றப்பு பிறப்பு என்ற இரண்டும் நம்முடைய வாழ்க்கையின் இரண்டு தலைப்பிலும் உள்ளவை. கொள்ளியின் ஒரு தலைப்பாகிய பிறப்புத் துன்பத்திலிருந்து வெளிப்பட்டு வந்திருக்கிறோம். மறுபக்கத்தில் இறப்பு என்னும் துன்பம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள வாழ்க்கையில் நின்று குலைகிறோம். இப்படி ஒரு பொருள் சொல்லலாம்.

சென்ற பிறவியில் நாம் செய்திருக்கும் புண்ணிய பாவங்கள் இந்தப் பிறவியில் வந்து பயனைத் தருகின்றன. இவற்றை ஊழ்வினை என்றும் பிராரப்தம் என்றும் சொல்வார்கள். அதன்படி நம்முடைய அநுபவங்கள் அமைகின்றன. ஆனால் இந்த வாழ்க்கையில் நமக்குரிய கருவி கரணங்களை எல்லாம் கொண்டு பல செயல்களைச் செய்கிறோம். முன்னைப் பிறவியில் நாம் செய்த செயல்களின் விளைவாகப் புண்ணிய பாவங்கள். நமக்குக் கிடைத்தன. அவற்றின் பயனைச் சுகமாகவும் துக்கமாகவும் இந்தப் பிறவியில் அடைகிறோம். முன்னை வினையின் விளைவு இது. இந்த அநுபவம் அன்றி, புதிய செயல்களைச் செய்கிறோம். அந்தச் செயல்களின் பயன் அடுத்த பிறவியில் கிடைக்கும். எனவே இந்தப் பிறவியில் முன்னை வினைப்பயனால் வரும் அநுபவமும், புதுச் செயல்களினால் வரும் புண்ணிய பாவங்களும் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் நாம் குலைந்து நிற்கிறோம்.