பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

உள்ளம் குளிர்ந்தது

அநுபவம் இப்படி வருகிறதே என்று பார்த்தால் அதற்கு மூலகாரணம் முன்னை வினை என்று தெரிகிறது. அந்த அநுபவத்தை மாத்திரம் அனுபவித்துச் செயல் இல்லாமல் இருக்கலாமே என்றால், நம்முடைய மன நிலை அதற்கு அமைந்ததாக இல்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். இப்படி முன்னை வினையின் விளைவுக்கும், இப்போது செய்யும் செயலுக்கும் இடையில் நின்று திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான்.

நம்முடைய வாழ்க்கையில் நமக்கே சில சமயங்களில் சில எண்ணங்கள் தோன்றுவது உண்டு, வேறு சிலருடைய அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்கிறோம். திண்மையான மனம், தன்னுடைய எண்ணத்தில் சிறந்தன இருந்தாலும் பிறர் உபதேசங்களில் சிறந்தன இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும். அது இல்லாதவனுக்குப் பிறர் உபதேசம் செய்கிறபோது நல்லதாகத் தோற்றும். அடுத்தபடி அதற்கு மாறாகத் தன் எண்ணமே சிறந்ததாகத் தோற்றும். இப்படி நம்முடைய அறிவுக்கும், பிறருடைய உபதேசத்திற்குமிடையே நின்று இதுவோ அதுவோ என்று சந்தேகப் பிறவிகளாகத் திண்டாடுகிறோம். ஒரு பக்கத்தில் நம்முடைய எண்ணங்கள் இருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் பிறருடைய உபதேசம் இருக்கிறது. இருதலைக் கொள்ளியீடை எறும்பு போல, இன்னதுதான் செய்வது என்று தெரியாமல் அப்போது திண்டாகிறோம். எண்ணத்தில் திண்மை இல்லாமையினால் வந்த விளைவு இது. இப்படியும் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை ஒன்று உண்டு.

இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டுமென்று முயலும்போது கூடப் பல சமயங்களில் இப்படி இரண்டு வேறு எண்ணங்கள் வந்து மோதுகின்றன. இறைவ-