பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

85

னுடைய திருநாமத்தைச் சொல்லித் திருவுருவத்தைக் கண்டு பக்தி செய்ய வேண்டுமென்று நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் அதை நம்பி வருகிறோம். ஆனால் ஒரு சாரார், இறைவன் குணம் குறி கடந்தவன், அவனுக்கு விக்கிரகம் கூடாது என்று சொல்லுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சென்ற நெறியும், புதிய அறிவாளிகள் சொல்லும் நெறியும் ஒன்றுக்கொன்று மாறுபாடாகத் தோற்றுகின்றன. அவற்றின் நடுவில் நின்று இன்னது செய்வது என்று தெரியாமல் நாம் திகைக்கிறோம். இது ஒருவகை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.

தர்ம சங்கடங்கள்

லக வாழ்க்கையில் எத்தனையோ தர்ம சங்கடங்கள் உண்டாகின்றன. இரண்டு வகையான தர்மம் ஒன்றுக் கொன்று எதிராக நிற்கும்போது தர்ம சங்கடம் எழுகிறது. ஒரு பாம்பு இரையை உண்ண வருகிறது. அப்போது பாம்பை அடித்தால் அதைக் கொன்றவர் ஆகிறோம். அடிக்காமல் இருந்தால் இரையாகிற பிராணியைச் கொலை செய்ததுபோன்ற துயரம் வருகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் நின்று திகைக்கிறோம். தர்ம சங்கடமான நிலை அப்போது வருகிறது.

இப்போது எங்கே பார்த்தாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. மனிதன் வாழவேண்டுமானால் விஞ்ஞானத்தின் முயற்சியும், தொழில் முயற்சியும் சிறந்து நிற்கவேண்டுமென்று அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை நன்றாக முன்னேறினால்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்பதை அவர்கள் வற்புறுத்துகிறார்கள். அதேசமயத்தில் நம்முடைய ஞான நூல்கள், ஒவ்வொருவனும் தன்னுடைய ஆன்மா கடைத்தேறும் வழியைப் பார்க்கவேண்டுமென்று