பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

அந்த எல்லையிற் பள்ளி, ஏற்படுத்தப்பட்டும், அதனால் உள்ள பலனைப் புக்கர் அடைய முதற்கண் இயலவில்லை. சிறிய தகப்பனார், புக்கர் உலக்களத்தில் வேலை செய்து கொஞ்சம் கூலி பெற்றுத் தருவதை நினைத்து, அவர் படிக்கப்போனால் தாம் அந்த்க் காசை இழக்க வேண்டுமே எனக் கருதி, அவரைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டார். புக்கருக்கு வந்த ஏமாற்றம் இவ்வளவு அவ்வளவு அன்று. அப்பள்ளிச் சிறுவர்கள் காலை மாலையிற் செல்லும் வழியில் அவ்வுலைக்களம் இருந்தபடியால், அவர் அச்சிறுவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் மிகவும் வருந்தி வருந்தி உளைந்தார். ஆயினும், எப்படியாவது படித்துத் தீர்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அவர் முதற்பாட புத்தகத்தை நன்றாகக் கற்க முற்பட்டார். கல்வி கற்கும் முயற்சியில் புக்கர் தம் தாயினுடைய முழு ஆதரவைப் பெற்றிருந்த படியால், சின்னட்சென்ற பின் ஓராசிரியரைத் தமக்கு இரவிற் பாடம் கற்றுத்தர ஏற்பாடு செய்துகொண்டார். ஆனால், பகற்பள்ளிக்குச் சென்று முழு நேரம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் அவரைவிட்டு அகலவில்லை. பின்னர், ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் அதிகாலையில் எழுந்து, ஒன்பது மணிவரை உலக்கள வேலைபார்த்துப் பள்ளிக்குச்சென்று மாலையில் திரும்பி வந்ததும், இரண்டு மணி வேலை , மீண்டும் பார்க்க வேண்டும் என்ற திட்டத்தை ஏற்படுத்திக்-