பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. வாழ்க்கையின் பிற்பகுதி

முற்பகுதியிற் கூறப்பட்டபடி பல இடங்களுக்குச் சென்று பிரசங்கம் புரிய அவரது வேலையினிடையே எப்படி இயன்றது என்று புக்கரைப் பலர் கேட்டதுண்டு. அவர், " உன்னால் செய்ய முடிவதைப் பிறரைக் கொண்டு செய்து கொள்ளாதே,” என்ற பழமொழியைப் புறக்கணித்து, “பிறரும் உன்னைப்போலச் செய்யக்கூடியதை நீ செய்யாதே," என்பதைக் கருத்திற் கொண்டு ஒழுகினார், டஸ்கிகீக் கலாசாலையின் வேலை, ஒருவர் உண்மையைப் பொறுத்ததாக அமைக்கப்படவில்லை ; ஒருவர் உள்ளாரோ இல்லையோ, நடைபெற வேண்டிய அனைத்தும் நடைபெற்றுவிடக் கூடியமுறையில் அமைக்கப்பட்டிருந்தன. ஆசிரியருங் குமாஸ்தாக்களும் கலாசாலையின் நிருவாகத்திற் பங்கெடுத்துக் கொண்டு ஒழுங்குபட நடந்து வந்தமையால், கலாசாலை ஆகிய இயந்திரம் கடிகாரம் ஒடுவதைப்போல இயங்கிக் கொண்டிருந்தது. ஆசிரியரிற் பெரும்பாலோர் கலா சாலையில் மிக்க பற்றுடையவராய் இருந்தனர். புக்கர் இல்லாத வேளையில், வாரன் லோகன் (Logan) என்ற பண்டாரத்தாரே பிரீன்ஸ்பால் வேலையைப் பார்ப்பார். 1893-ஆம் ஆண்டில், புக்கரால் மணந்துகொள்ளப்பட்ட மார்கரெட்டு ஜேம்ஸ் (Margaret James) என்ற ஆசிரியை, புக்கர் இல்லாத வேளைகளில் வாரன் லோகன்