பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிலை யடைத்துக் கொள்ளையிடுகிறவனா. குருக்களுக்குத் தக்ஷண கொடுப்பான். கோவில், மணியமென்று, கூப்பிட்டாற் போதாதா? கோவில் மணியம் போனால், நம்பியான் கழலும் போச்சுதா? கோவுக்கழகு, செங்கோன் முறைமை. கோழிக்குஞ்சுக்கு பால் கொடுத்து போல. கோழி கூப்பிட்டுவிடுகிறதா, நாய் குலைத்து விடுகிறதா? கோழி கொடுத்து. குரலுமழிகிறது. கோழிக்கறி கொடுத்து. குயில் கறி வாங்கினாற்போல். கோழிக் காச்சலும், குண்டன் காச்சலும் விடாது. கோழி திருடியும், கூடி யழுகிமுள். கோழி போனது மல்லாமற், குரலும் போச்சுது. கோழி மிதித்துக் குஞ்சு முடமாகுமா? கோழி முட்டைக்குத் தலையுமில்லை, கோயிலாண்டிக்கு முறையுமில்ல. கோழி முட்டைக்கு, மயிர் பிடுங்குகிறது. கோழியின் காலில் கெச்சையைக் கட்டினால், குப்பையைக் குப்பையைச் சீக்கும். கோழையில் மொய்த்துக், குழம்பும் ஈப்போல். கோளுஞ்சொல்லிக் கும்பிடுவானேன். கோள் சொல்லிக், குடியைக் கெடுக்கிறது. கோனான் கோலெடுக்க, நூறாடு ஆறாடாச்சுது. சகல தீர்த்தங்களுக்கும். சமுத்திரமே ஆதரவு. சகல நக்ஷத்திரம் கூடினாலும், சந்திரனுக் கிணையாமா? சகலனுறவிற் சாண் கயிறு பஞ்சமா? சகோதர முள்ளவன். படைக்கஞ்சான். சர்க்கரைப் பந்தலிலே, தேன் மழை பொழிந்தாற்போல. சர்க்கரைப்பாவுத் தோண்டியிலே, தாழ மொண்டாலும். தித்திப்பு. மேலே மொண்டாலும், தித்திப்பு. சர்க்கரையு மாவும், சரியாகுமா? சர்க்கரையென் றெழுதி நக்கினால் ருசிக்குமா? சக்கலியப் பெண்ணுஞ் சாமைக்கதிரும். பக்குவத்திலே பார்த்தாலழகு. சங்கனும். புங்கனும், சந்நியாசிக் குதவி.