பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரீரப் பிரயாசையென்ன, சாண் வயிற்றுக்குத்தான். சருகரிக்க நேரமன்றி, தீக்காய நேரமில்ல. சருகைக்கண்டு, தணலஞ்சுமா? சல்லடைக்கண்போலே, சில்லுசில்லாய்த் துளைக்கிறது. சல்லிய சாரத்தியம், செய்யாதே . சல்லிவேரற, கெல்லிப்பறிக்கிறது. சவண்டிக்கிச் சாப்பட்டவனிருக்க, செத்தது பொய்யா? சவ்வாதிலே மயிர் வாங்கினது போல. சளி பிடிச்சுதோ, சனி பிடிச்சுதோ. சளுக்கன் தனக்கு சத்துரு. சவுளிக்காரனுக்கு மித்துரு. சர்வவில்லங்க சித்தி. சற்சனருறவு, சர்க்கரைப் பாகுபோல. சற்பத்தின் வாய்த், தவளை போல. சனத்தோடு சனஞ் சேரும், சந்தனத்தோடு கற்பூரஞ் சேரும். சனிப்பிணம், துணைகூட்டும். சனியனை விலைக்கு வாங்கினது போல. சனியன் பிடித்தவளுக்கு. சந்தையிற் போனாலும் புருஷன கப் படமாட்டான், சன்னதங்குலைந்தால், வீரப்பெங்கே? சன்னதங்குலைந்தாற் கும்பிடெங்கே கிடைக்கும். சன்னியாசி, பூனைவளர்த்தாற்போல சன்னியாசியார் சந்தையிலே கண்டவனே, யென்மூட்டினார், தவசிப் பிள்கள் சன்னியாசியார் கண்டவளே யென்பாட்டினான். சா சாகப் பொழுதன்றி, வேகப்பொழுதில்லை. சாகமாட்டாமல் சங்கடப் படுகிறது. சாகாமற் கற்பதே கல்வி, பிறரொருவ நோகாமலுண்பதே ஊ சாகிற காலத்திலே, சங்கரா சங்கரா வென்றாற்போல. சாகிற வரையில், மருந்து கொடுக்கவேண்டும். சாகிறவரையில், வயித்தியன் விடான், செத்தாலும் விடான் பா சாங்கக்காரன். சாகிறவனுக்குச் சமுத்திரம். முழுங்கால் மட்டும். சாகையிலே வந்தால், பாடையிலே பார்க்கலாம்.