பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாக்கடைப் புழுவிற்கு, போக்கிடமெங்கே? சாக்கடைப் புழுவானாலும், சக்களத்தியென்றாற் போதும். சாகோ, நோகோ, அம்மையார் வாக்கோ? சாடிசட்டி சூளைமேலே, கோடையிடி விழுந்தாற்போல. சாடையறியாதவன், சங்காத்தியா? சாட்சிக்காரன் காலில் விழுவதிலும், சண்டைக்காரன் காலில் விழலாம். சாட்டையில்லாப் பம்பரம் போல், ஆட்டிவைக்க வல்லவன். சாணிக்குழியும். சமுத்திரமும். சரியா நினைக்கலாமா? சாணியைக்கொடுத்து. மெழுகென்றானாம். சாணியொரு கூடை, சவ்வாதொரு பணவிடை, சாணேற, முழம் சறுக்கிறது. சாண்காட்டிலே, முழத்தடி வெட்டினாற்போல. சாண் குருவிக்கு, முழவாலாம். சாணிசடைக்கு. முழத்துணி. சாண்தண்ணீரிலே, முழப்பேய். சாண்பறைக்கு. முழத்தடி. சாதிக்குணம், தன்னை விடாது. சாதித்தொழில், தனக்குத் தானேவரும். சாதிமானமும், சமையமானமும், சந்நியாசிக்கு முண்டு. சாதியந்த புத்தி, குலமந்த ஆசாரம். சாதுமருண்டாற் காடுகொள்ளாது. சாதுரியப்பூனை, மீனைவிட்டுப், புளியங்காயைத் தின்றதாம். சாத்தாணி குடுமிக்கும், சந்நியாசி பூணுலுக்கும், முடி போடு. சாத்திரம் பாராதவீடு. சமுத்திரம். சாராயத்தை வார்த்துப், பூராயத்தைக் கேளு. சார்வில்லாதவனுக்கு நிலையில்லை. சாலாய் வைச்சாலும் சரி, சட்டியாய் வைச்சாலும் சரி. சாலோடு அகப்பை. தட்டாமற் போகுதா? சாலோடே தண்ணீர். சாய்த்துக்குடித்தாலும், தாய் வார்க்குந் தண்ணீர் தாகந் தெளியும். 991