பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டி வீட்டிற் பணமிருக்கிறது. ஆலமரத்திற் பேயிருக்கிறது. செணச் சித்தம், செணப் பித்தம். செத்த அன்றைக்குச் சொன்னால், பத்தாநாள் வருவான். செத்த நாய், திருப்பக் கடியாது. செத்த பாம்பை யாட்டுவாளாம். வித்தைக்காரப் பெண்பிள்ளை. செத்த பிணத்துக்குக் கண்ணேன், சிவசிவா ஆண்டிக்குப் பெண்ணேன். செத்தபிறகா. செய்தவனுக்குச் செய்கிறது. செத்தபிறகா, செல்வமனுபவிக்கிறது. செத்தவன் சுண், செந்தாமரைக்கண், இருந்தவன்கண் ணொள்ளைக்கண். செத்தவன் சூத்து தெற்கே இருந்தா லென்ன, வடக்கே இருந்தாலென்ன. செத்தவன் பிள்ளை. இருக்கிறவனுக் கடைக்கலம். செத்தவன் வாயிலே மண், இருந்தவன் வாயிலே சோறு. செத்தவன் வீட்டிற், கெட்டவன் யார்? செத்த விடம், புல்லு முளைத்துப்போம். செத்தால் தெரியும், செட்டியார் வாழ்வு. செத்தால், பிழைக்கறியான். செத்துஞ் சாகாதவன், தியாகங் கொடுப்போன். செத்துத் தெய்வமாய், நிற்கிமுன். செத்துப்போன தாதன், மொட்டுப்போலே முளைத்தான். செத்துப்போன பாட்டனிருந்தால், தாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம். செந்தணலை முந்தானையில். முடியலாமா? செப்படி வித்தை, எப்படி போவேன். செப்பிலு மில்லை, பந்திலு மில்லை. செம்பு நடமாட. குயவன் குடிபோகிறன். செயமுள்ள மட்டும். பயமில்லை. செய்த தீவினை, செய்தவர்க்கே. செய்துஞ் செய் தவத்தம். செய்யா பிள்ளை வரப்பலே, செய்வா செய்வா வென்னேனே. நீ செய்யேன் என்யே. நீ பார்த்துக்கோ, நீ கேட்டுக்கோ. செய்யாத வித்தையெல்லாஞ் செய்தாலும், தேங்காய் குடுக்கை யிலே மூத்திரம் பேய்வாளா? செய்யுத் தொழிலெல்லாஞ் சீர் தூக்கிப் பார்க்கில், நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை. 107