பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீரிலிருக்கிற தவளையை, கரையிலெடுத்து விட்டதைப் போல. தண்ணீரிலிறங்கினாற், றவாைகடிக்கு மென்கிறன். தண்ணீரிலிறந்தவரிலும், சாராயத்திலிறந்தவரதிகம். தண்ணீரும் கோபமும், தாழ்ந்தவிடத்திலே. தண்ணீரும், மூன்று பிழை பொறுக்கும். தண்ணரையுந் தாயையும் பழிக்கலாமா? தண்ணீர் குடித்த வயிறும், தென்னோலையிட்ட காதுஞ் சரி. தத்திக்குதித்து. தலகழே விழுகிறது. தத்தி விழுந்தால், தரையும் பொறுக்காது. தந்தவன் இல்லையென்முல், வந்தவன் வழியைப் பார்க்கிருன். தந்தனாவென்கிறது. பாட்டுக்கடையாளம் தந்தாலொன்று. தராவிட்டாலொன்று. தந்தை சொல் மிக்க, மந்திரமில்லை. தப்படித்தவன் தாதன், சங்கூதினவன் ஆண்டி. தப்புந் திப்பும், தாறுமாறும். தம்பி கால் நடை, பேச்சுப் பல்லக்கிலே. தம்பி சோற்றுக்கு சூரவளி, வேலக்க வாராவழி. தம்பி பிள்ளையாண்டானலுவல், தலைசொரிய நேரமில்லை. தம்பி பிறக்க, தரைமட்ட மாச்சது. தம்பி பேச்சை. தண்ணீரி லெழுதவேண்டும். தம்பியுடையவன், படைக்கஞ்சான். தம்பியுழுவான், மேழியெடாது. தம்மினந் தம்மைக்கார்க்கும். வேலி பயிரைக்கார்க்கும். தயவு தாட்சணியம் , சற்முகிலுமில்லை. தயிருக்குச் சட்டியாதரவு, சட்டிக்குத் தயிராதரவு. தரித்திரப்பட்டாலும் தைரியம் விடாதே. தரித்திரம் பிடித்தவள், தலை முழுகப் போனானாம். அப்பவே பிடித்த தாம். மழையுந் தூறலும். தருமம், தலைகார்க்கும். தலைகீழாகத் தவஞ்செய்தாலும். கூடுகிற காலம் வந்து தான் கூடும். தலைக்குத்தலை, நாட்டாமையாயிருக்கிறது. தலைக்குமேலே. கைகாட்டுகிறது. தலைக்குமேலோடிய வெள்ளம், சாணோடியென்ன, முழ மோடி யென்ன? தலைசொறியக்கொள்ளி, தானே வைத்துக் காண்டாற் போல, தலைச்சன் பின்ளைக்காரி, இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம். 113