பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்காரியம் பார்க்காதவன், சதையாலொருபுழுபுழுப்பான். தன் கீர்த்தியை விரும்பாதவளைத் தள்ளிவிடு. தன்குற்றம், தனக்குத் தெரியாது. தன் குற்றமிருக்கப், பிறர் குற்றம் பார்க்கிறதா? தன்சோறு தின்று, தன்புடவைகட்டி, வீண்சொல்கேட்க விதியா. தன்தாரதாரப், பாதாரபுத்திரன். தனபலங்கொண்டு, அம்பலமேறவேண்டும். தன்பல்லக்குத்தி, பிறர் மூக்கில் வாசங்காட்டுகிறது போல, தன்பாவம், தன்னோடே. தன்பானைச் சாயப்பிடிக்கிறதில்லை. தன்பெண்டாட்டியைத் தானடிக்கத், தலையாரியை சீட்டு கேட்கிறதா? தன்பேரிலே குருக்களாணையிட்டு, முழையை விழுங்கச் சொன் னால் விழுங்கலாகுமா? தன்முதுகு, தனக்குத் தெரியவில்லை. தன்வாயால் தான் கெட்டுதாம், ஆமை. தன்வாய்ச்சிதேவி, முன்வாயிலே. தன் வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும். தன்வீடு தவிர. அசல் வீட்டுக்கு மோட்டுவரியென்கிறான். தன் வீட்டு ஆம்பிடையான், தலைமாட்டிலும், அசல் வீட்டாம் படையான், கால்மாடுநலம். தன் வீட்டுக்கதவைப் பிடுங்கி, அசல் வீட்டுக்கு வைத்துவிட்டு, விடிகிற மட்டும் நாயோட்டினதுபோல. தன் வீட்டு விளக்கென்று, முத்தமிடலாகுமா? தன்வீட்டுக்கு வந்த விருந்தாளியை. அசல் வீட்டுக்குப் போகச் சொன்னாற் போவானா? தன்னிச்சையை யடக்காவிட்டால், தன்னையாளும். தன்னிலத்திற்குறுமுயல், தந்தியிலும் வலிது. தன்னிழல், தன்னைக்கார்க்கும். தன்னுயிர் (கருப்பட்டி) அருமை. தன்னுயிர்போல, மன்னுயிரையும் பார்க்க வேண்டும். தன்னூருக்கானை, அசலூருக்குப் பூனை. தன் கோச்கொல்ல வந்த பசுவைக் கொல்லு. தன்னைச் சிரிப்பதறியாதாம், பல்லாவரத்துக் குரங்கு. தன் கனப்பணிவாரை, தான் பணியக் காலம் வந்தது. தன்னைப்புகழத் தகும்புலவோர்க்கே. 116