பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைப்புகழ்வானுஞ். சாணேறி நிற்பானும், பொன்னைப் புதைத்து வைத்துப் போவானம் பேய். தன்னைப் பெற்றதாய், கிண்ணிப்பிச்சை வாங்கச்சே. தங்கத் தாலே சரப்பளி தொங்க ஆடுதாம். தன்னைப்பெற்றவள் கொடும்பாவி, பெண்ணைப்பெற்றவள் மகராசி. தன்னையழுத்தினது. சமுத்திரம். தன்னையறிந்தால், தலைவனையறியலாம். தன்னையறியாச். சன்ன தமுண்டா? தா தாகமிருக்கிறது இறக்கமில்லை. தாங்கித் தாங்கிப் பார்த்தால், தலைமேலேறுகிறான். தாசிக்கிப் பணையங் கொடுத்தால், தகப்பனும் போகலாம், பிள்ளையும் போகலாம். தாடிபத்திக்கொண்டெரியச்சே. சுருட்டுக்கு நெருப்பு கேட்டானாம். தாட்டோட்டக்காரருடன் கூடுவதிலும், தனியே இருப்பது நலம் தாட்டோட்டக்காரனுக்குத் தயிருஞ்சோறும், விசுவாசக் காரனுக்கு வென்னீரும் பருக்கையும். தாதராட்டம். திருப்பதியிலே. தாதன் கரத்திலகப்பட்ட குரங்கைப்போல், அலைகிறான். தாபரமில்லா. இளங்கொடி போல. தாமரையிலத் தண்ணர்போல, தளம்புகிறது தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல். தாயறியாத. சூலுண்டா . தாயாயிருந்தாலும் பிள்ளையாயிருந்தாலும். வாயும் வயிறும் வேறே. தாயில்லா தகப்பன் தாயாதி. 117