பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயின் முகம்பார்க்கும். சேயின் முகம்போல. தாயும் தகப்பனும் தவிரச் சகலமும் வாங்கலாம். தாயைக்கொன்றவனுக்கு, ஊறிலே பாதிப்பேர். தாயைப் பார்க்கிலும், சிறந்த கோயிலுமில்லை. தாயைச் சேர்ந்தவுறவானாலும். அறுத்துத்தான் உறவாட வேண்டும். தாயைப் பழித்த மகள், தானுமவுசாரி போனாளாம். தாயைப் பார்த்துப் பெண்ணைக்கொள்ளு. பாலைப்பார்த்து பசுவைக் கொள்ளு. தாயை மறக்கடிக்கும், தயிரும் பழஞ்சோறும். தாய்கைப் பசும்பொன்னிலும், தன்கைத் தவிடே மேலாகும். தாய்க்காகாதபிள்ளை, ஊர்க்காகுமா? தாய்க்குப்பின், தாரம். தாய்க்கடங்காதவன், ஊர்க்கடங்கான், ஊர்க்கடங் காதவன் ஒருவருக்கு மடங்கான். தாய் செத்தாள், மகள் திக்கற்றாள். தாய்ச் சிலைக்குச் சாண துணியில்லை, தலைக்கிமேலே சருகை மேற்கட்டி. தாய் தூற்றினால், ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான். தாய் பொறுக்காததை, ஊர் பொறுக்குமா? தாய்ப்பொன்னிலும், மாப்பொன் திருடுகிறது தட்டான். தாய் முகங்காணாத பிள்ளையும். மழைமுகங்காணாத பயிரும். தாய்முலை குடித்துத் தாகந்தணியவேண்டும். தாய் வசவு, பிள்ளைக்குப் பலிக்குமா? தாரத்தை ரக்ஷியாதான் வீரம், என்னத்துக்கு தாரமும் குருவும் தலைவிதி. தாராளந்தான் நெய் தண்ணீர்ப்பந்தல், நீர்சோற்றுத் தண்ணீருக்கு நெய்பட்டபாடு. தாலிப்பறி, சீலைப்பறியா? தாலியறுத்தவள் ஏனிருக்கிறாள், தாரந்தப்பினவனுக்குப் பொங்கியிட தாழ்ந்து நின்றால், வாழ்ந்து நிற்பாய். தாழ்ந்து பணிதலே, தலைமையாகும். 118