பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துச்சச்தனத்தையெல்லாம் விட்டு விட்டு, தோட்டிச்சியைக் குத் தகையாய் வைத்துக்கொண்டானாம். துஞ்சி நின்முன், மிஞ்சி யுண்ணான். துடைப்பக் கட்டைக்கு, பட்டுக்குச்சு கட்டினதுபோல. துடையிற் புண்ணைக், கடையிலே காட்டலாமா? துடையுங்கிள்ளித், தொட்டிலு மாட்டுகிறது. துட்ட நிக்கிரகம், சிட்டபரிபாலனம். துஷ்டப் பிள்ளைக்கு. ஊரார் புத்திசொல்வார்கள். துட்டுக் கெட்டுச் சட்டி வங்கி, சட்டி யெட்டுத்துட்டுக்கு வித்தாலும் வட்டிக்கீடல்ல. துட்டுக்கொருகுட்டி விற்றாலும், துலுக்கக் குட்டி மாத்திர மாகாது. துணிகிறவளுக்குத் துக்கமில்லை, அழுகிறவளுக்கு வெட்கமில்லை. துணிந்தவனுக்குத், துக்கமில்லை. துணைபோகுது. பொங்கினத்தைக் கொடு. துண்டுபாளையக்காரன், இடைநடுவி லடிக்கிறாப்போல. துப்பாக்கி வயிற்றிற், பீரங்கி பிறந்தது போல. துப்பு கெட்டவளுக்கு. ரெட்டைப்பங்கு. தும்பல், அம்பலம். தும்பை விட்டுவிட்டு, வாலைப்பிடிக்கிறது. தும்பலிலெபோனாலும், தூற்றலிலே போகக்கூடாது. தும்பினவன் செத்தால், நிம்மளமற்றது. துரியோதனன் குடிக்கு. சகுனிபோல. துருசு கல்வி, அரிதுபழக்கம். துரும்புகின்ளுவது, துக்குறித்தனம். துரும்புதுணனால், தூணெப்படியாகாது. துரும்பு நிழைவிடமிருந்தால், யானையைக்கட்டுவான். துரும்பை வைத்து. மூத்திரம்பேய்கிறதா. துரைகளோடே, சொக்கட்டான் போடலாகுமா? துரைகளோடே சொக்கட்டான் போட்டால், தோர்த்தாலுங்குட்டு, வென்றாலுங்குட்டு. துரைச்சித்தம், கனச்சித்தம். துரைத்தனம் பண்ணுகிறவன் பெண்சாதிக்கு, சூத்திலே கட்டத் துணியில்ல. துரை நல்லவன், பிரம்பு பொல்லாது. 123