பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரோகத்தாற்கொன்ற துரைத்தனம். குடிகளை வருத்தும் கொடுங்கோல். துர்ச்சனப்பிள்ளைக்கு, ஊரார் புத்திசொல்லுவார்கள். துலக்காத ஆயுதம், துருப்பிடிக்கும். துலுக்கத் தெருவிலே. தேவாரமோதினது போல. துலுக்கத்தெருவிலே, திருவெண்பா வோதினாற்போல துள்ளி சமுத்திரம் பொங்கினால், கொள்ளுமாகிணறநேகம். துள்ளித்துள்ளி, தொப்பென்று விழுகிறாய். துள்ளினமாடு. பொதி சுமக்கும். துள்ளுமான துள்ளித் . துரவிலடைகிறது. துறக்கத்துறக்க ஆனந்தம். துறந்தபின்பு பேரின்பம். துறட்டுக்கெட்டாதது. வாய்க்கெட்டுமா? துறவிக்கு வேந்தன், துரும்பு. துரைநாச்சியார் கும்பிடப்போய்ப் புறப்பட்ட ஸ்தன்னிய முள்ளே போச்சுது. துற்சனகனக்கண்டால் தூரத்தூர. துற்பலத்திலே கெற்பனையானால், எப்படி முக்கிப் பெறுகிறது. துற்புத்தி மந்திரியாலரசுக்கீனம், சொற்கேளாப் பிள்ளைகளால், குலத்துக்கீனம். தூ தூக்கிநிருத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன். தூக்கிப்போட்டது மல்லாமல், குதிரைதொண்டிக் குழிப் பறித்துதாம். தூக்கியேறவிட்டேணியை வாங்குந், தூர்த்தர் சொல்லைக் கேளாதே. தூக்கிமுற்சென்னி துடிக்கத் துணித்துவிடு, மாக்கினாற் சக்சுரம் பொலாணை. தூக்குண்டானால் நோக்குண்டு. தூங்கிறவன் சூத்திலே சுப்பிபெடுத்துக் குத்தினாப்போல. தூங்கிறவாய்க்காறனை யெழுப்பிவிட்டால்ப், போன வருஷத்துத் திருவையுங் கொடுத்து விட்டுப் போவென்பான். 124