பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்ன மரத்திற்பாதி, என்னைவளர்த்தாள் பாவி. தென்ன மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால், தலையாலே தரும். தென்லடிக்கிற காற்றே, என்னிறுக்கத்தையாற்றே. தென்னாலிராமன். பூனை வளர்த்தது போல. தே தேசங்கள் தோறும், பாக்ஷைகள் வேறு. தேசத்து நன்மை, தீமை, அரசருக்கல்லவா? தேஞ்சாய், மாஞ்சாய், கொம்புங் கறுத்தாய், தும்பிக்கையை முள்ளே சுருக்கிக்கொண்டாயா? தேஞ்சு, மூஞ்சுறாய்ப்போகிறது. தேடக் கிடையாது தேடவென்றால் கிட்டாது. திருப்பிக்கொடப்பா திருப்பிக்கொடு. தேடித் திருவிளக்குவை. தேடிப் போன மருந்து. காலியகப்பட்டது போல, தேடிய பூண்டு, காலிலெ சிக்கினாற்போல தேருக்குள்ளே, சிங்காரமெல்லாங்கிடக்கிறது. தேரைகள் பாம்பை, திரண்டுவளைத்தாற்போல. தேரைமோந்த, தேங்காய் போல. தேரோடே நின்று, தெருவோடே அலைகிறான். தேவடியாள் தெருவு, கொள்ளைபோகிறதா? தேவடியாள் மகன். திவசஞ் செய்ததுபோல. தேவரீர்சித்தம், என்பாக்கியம். தேவருடமை தேவருக்கே. தேவர்சொம்மு, தேவருக்கே. தேளுக்குக் கொடுக்கிலே விஷம், தேவடியாளுக்கு உடம்பெங்கும் விஷம். தேறாச்செய்கை, தீராச்சஞ்சலம். தேற்றிக், கழுத்தறுகிறது. தேனில் விழுந்த, ஈப்போல் அலைகிறான். தேனுக்கு சயை, கொண்டு வந்து விடுகிறவர்கனார்? தேனும்பாலும் போல், இருக்க வேண்டும் தேனுள்ள விடத்தில், ஈ மொய்க்கும். தேனெடுத்தவரைத் தெண்டிக்குமா தேனீ? தேனைத்தொட்டியோ, நீரைத்தொட்டியோ? 126