பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனை வழித்தவன் புறங்கையை நக்கானா? தேனெழுகப்போசி, தெருகடக்க வழிவிடுவான். தை தை பிறந்தால் வழி பிறக்கும். தையல் சொற்கேட்டால், எய்திடுங்கேடு. தையு மாசியும். வையகத்துறங்கு! தொ தொட்டவன் போல பழி, அப்பனைப்போட்டு வலி. தொட்டாற்றேழன். விட்டால் மாற்றன். தொட்டிலும் ஆட்டிப், பிள்ளையுங்கிள்ளுவான். தொட்டுக்காட்டாத வித்தை, சொட்டுப்போட்டாலும் வராது. தொட்டுக்கோ, துடைத்துக்கோவென் றிருக்கிறது. தொட்டெடுத்த பணத்தை. தட்டிப்பறித்தாற்போல தொண்டையிலே, கண்டமாலை புறப்பட தொண்டையிலே, தூறுமுகாக்க தொண்ணூறு பொன்னோடெ, துவரம்பருப்பு காற்பணம். தொத்துக்குதொத்து சாட்சி, துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி. தொப்புளறுக்கப்போப், மாணியை யறுத்துக் கொண்டானாம். தொழுவம்புகுந்த ஆடு புழுக்கையிடாமற் போகுமா? தோ தோகையழகை, தொட்டுப்பொட்டிட்டுக் கொள்ளலாம். தோசிப்பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்கள். 127